சென்னை: காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி, இன்று உரையாற்றுகிறார்.
அமெரிக்காவின் சிகாகோ நகரில் சுவாமி விவேகானந்தர் உரையாற்றிய 125வது ஆண்டு விழா இன்று கொண்டாடப் படுகிறது. இதை ஒட்டி, கோவை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் (செப்.,11) இன்று நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, காணொலி காட்சி மூலம் உரையாற்ற உள்ளார்.
இன்றைய பிரதமரின் நிகழ்ச்சி நிரலின் படி, அங்கன்வாடி பணியாளர்களுடன் காலை 10.30 மணிக்கும், ராமகிருஷ்ண மடம் நிகழ்ச்சியில் மாலை 3.30 மணிக்கும் காணொலி காட்சியில் உரையாற்ற உள்ளார் பிரதமர் மோடி.
இதனை பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
At 3:30 PM tomorrow, I will address via video conferencing the Valedictory Function of the 125th Anniversary of Swami Vivekananda’s Chicago speech, organized by Sri Ramakrishna Math, at Coimbatore.
— Narendra Modi (@narendramodi) September 10, 2018