கோல்கத்தா : மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஜாதவ்பூர் பல்கலை சார்பில் வழங்கப்பட இருந்த கௌரவ டாக்டர் பட்டத்தை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஏற்க மறுத்துவிட்டார்.
ஜாதவ்பூர் பல்கலையின் 63ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா வரும் டிச. 24 ஆம் தேதி நடக்கிறது. இதில் சச்சின் டெண்டுல்கருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க பல்கலை நிர்வாகம் முடிவு செய்தது. இது குறித்து சச்சினுக்கு தகவல் அளிக்கப் பட்டது. ஆனால் சச்சின் டெண்டுல்கர் அந்தப் பட்டத்தை ஏற்க மறுத்து விட்டார்.
இது குறித்து அவர் பல்கலை துணை வேந்தருக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில், கௌரவ டாக்டர் பட்டம் பெறுவது தார்மீக ரீதியாக தனக்கு சரியாகத் தெரியவில்லை என்று கூறி மறுத்துவிட்டார்.
ஏற்கெனவே பிரிட்டன் ஆக்ஸ்போர்டு பல்கலை வழங்க வந்த கௌரவ டாக்டர் பட்டத்தை சச்சின் மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




