spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாரஃபேல்... ராகுல்...! ரிலையன்ஸ் ஒப்பந்தம் எப்போது? சில தகவல்கள்!

ரஃபேல்… ராகுல்…! ரிலையன்ஸ் ஒப்பந்தம் எப்போது? சில தகவல்கள்!

- Advertisement -

ரஃபால் போர் விமானம் பற்றி சில விவரங்கள். ரஃபால் போர் விமானங்களை தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர் டஸ்ஸோ.

2012இல் யுபிஏ அரசு டஸ்ஸோ நிறுவனத்திடமிருந்து 126 ரஃபால் போர் விமானங்களை வாங்கத் திட்டமிருந்தது. இந்த 126 விமானங்களுக்காக பாதுகாப்புத் துறை ஒதுக்கியிருந்தது ரூ 163,403 கோடி – கிட்டத்தட்ட ரூ 1,296 கோடி ஒரு விமானத்துக்கு. இது மட்டுமல்லாமல், ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெடில் (HAL) இந்த விமானங்களை பண்ணுவதில் சிக்கல் நீடித்தது. இதனால், யுபிஏ காலத்தில் ஒப்பந்தம் ஏதும் கையெழுத்தாகவில்லை. 163 லட்சம் கோடி தப்பித்தது!!!

இவ்வாறு பல குழப்பங்களிலிருந்த யுபிஏ – டஸ்ஸோ விவகாரத்துக்கு பதிலாக, 2015 / 16இல் என்.டி.ஏ அரசு பிரான்சு அரசுடன் நேரடியாக ஒப்பந்தம் கையெழுத்திட்டது – 36 ரஃபால் போர் விமானங்கள் + இந்தியாவுக்கு தேவையான உபகரணங்களுடனும், மென்பொருளுடனும்.

126 விமானங்களுக்காகும் செலவு அதிகம் என்றாலும், விமானப்படை தனக்கு குறைந்தது 36 விமானங்கள் தேவை என்று கேட்டுக் கொண்டதால், வெறும் 36 விமானங்களுக்கு ஒப்பந்தம் செய்தது இந்திய அரசு. ஒப்பந்தத் தொகை ரூ 59 ஆயிரம் கோடி. இந்த ஒப்பந்தம் 2004இல் மன்மோகன் அரசு அளித்த அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தத்தின் அடிப்படையில் கையெழுத்தானது. அது மட்டுமல்லாமல், 2008 யுபிஏ அரசு அறிவிப்பின் படி, பாதுகாப்பு ஒப்பந்தங்கள் ரகசியமானவை. விலை ரகசிய உடன்படிக்கைக்கு உட்பட்டது. (ஆனால் விலை பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்படும்).

இரு அரசுகளும் கையொப்பமிட்டதால் தரகர்களுக்கு இடமில்லை. யுபிஏ ஒப்பந்தத்தில் தரகர்கள் உண்டு.

தற்சமயம் துபாயில் இருக்கும் (நாடு கடத்தப்படவிருக்கும்) கிறிஸ்ட்டியன் மிஷெல் இந்த டஸ்ஸோ நிறுவனத்தின் தரகர் (சோனியாவுக்கு தரகர்). அதே மிஷெல் அகஸ்ட்டா வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர் பேரத்திலும் தரகர்.

கிறிஸ்டியன் மிஷெலின் தந்தை பெயர் உல்ஃப்கங் மிஷெல். உல்ஃப்கங், இந்திரா காலத்திலிருந்தே இந்தியாவில் தரகு வேலை பார்த்தவர்.

கிட்டத்தட்ட ’70களிலிருந்தே இந்திரா குடும்பத்துக்கு மிஷெல் குடும்பம் தரகர்கள். (இந்திய பிரஜைகள் முட்டாள்கள்).

59 ஆயிரம் கோடிக்கான 36 ரஃபால் போர் விமானங்களை உற்பத்தி செய்யவிருக்கும் டஸ்ஸோ ஆஃப்செட் ஒப்பந்தப்படி 30% முதல் 50% இந்தியாவில் உற்பத்தி செய்யவேண்டும் அல்லது வாங்க வேண்டும்.

வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான இந்திய நிறுவனங்களுடன் கூட்டு அமைப்பதில் இந்திய அரசு தலையிடாது என்பது ஆஃப்செட் ஒப்பந்தத்தின் ஒரு அங்கம்.

அதற்கேற்ப, டஸ்ஸோ யாருடன் கூட்டு சேர்ந்துள்ளது என்ற விவரங்கள் இந்திய அரசுக்கு தெரிவிக்கப்படவில்லை. விமானங்களை அரசிடம் ஒப்படைக்குமுன் இந்த விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்பது ஒப்பந்தத்தின் நிபந்தனை.

ஆஃப்செட் நிபந்தனைப்படி, ரூ 59 ஆயிரம் கோடியில் பாதித் தொகையான ரூ 30 ஆயிரம் கோடிக்கு பாகங்களை வாங்க 72 இந்திய நிறுவனங்களை தேர்ந்தெடுத்திருக்கிறது டஸ்ஸோ.

டஸ்ஸோ தேர்ந்தெடுத்திருக்கும் 72இல் ஒன்று ரிலையன்ஸ். ரிலையன்ஸ் தவிர மற்ற நிறுவனங்களில் சில – Snecma-HAL Aerospace for engine components, Samtel for multi-function cockpit displays, Godrej, Larsen & Toubro and Tata Advanced Systems.

மேலும், ரிலையன்ஸ் உள்ளிட்ட எந்த இந்திய கூட்டு நிறுவனமும் முழு விமானத்தையும் செய்யப் போவதில்லை.

ரிலையன்ஸிடமிருந்து ரேடார் உள்ளிட்ட பாகங்களையே வாங்கப் போகிறது டஸ்ஸோ. (எந்தெந்த நிறுவனங்களிடமிருந்து என்னென்ன பாகங்கள் என்பதை படத்தில் காண்க).

மெற்சொன்ன விவரங்கள் இந்த போர் விமானம் பற்றிய சில குழப்பங்களை நீக்கும் என்ற நம்பிக்கையுடன், கீழே கூடுதல் தகவல்கள்:

– டஸ்ஸோவும் ரிலையன்ஸும் 2012 முதலே பாதுகாப்பு துறையில் ஒத்துழைக்க தனியே ஒப்பந்தம் கையெழுத்திட்டிருந்தன என்பது கூடுதல் தகவல். 2017இல் வணிக வானூர்திகளுக்கான பாகங்களை உருவாக்க டஸ்ஸோ ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தையும் இவர்கள் தொடங்கினார்கள். (ரஃபால் போர் விமானங்களுக்காக அல்ல).

– பிரான்சிடமிருந்து விமானங்கள் வாங்குவதால் போட்டி நிறுவனங்கள் ஒரு புறம் புரளி கிளப்புகின்றன. குறிப்பாக, 2017 வரை ரஃபாலில் எந்த குழப்பமும் இல்லாமல் இருந்தது. காங்கிரஸ் ‘தலைவர்’ ஒருவர் அமெரிக்க விமான நிறுவனத்துடன் 2017இல் பேச்சுவார்த்தை நடத்தியதிலிருந்து ரஃபால் பற்றி புரளிகளை காங்கிரஸ் கிளப்பியது குறிப்பிடத்தக்கது. ரஃபால் ஒப்பந்தத்தை கைவிட்டு அமெரிக்காவிலிருந்து வாங்க வேண்டும் என்பது காங்கிரஸ் திட்டம். ரஃபாலில் பெட்டி கிடைக்காவிட்டால் அமெரிக்காவிலிருந்து வேறு மாதிரி பெட்டி கிடைக்குமே!

– இது ஒருபுறமிருக்க, விமானத்தின் விலைகளை பாராளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்டாலும், காங்கிரஸ் & கம்யூனிஸ்ட்டுகள் விமானத்துடன் என்னென்ன ஆயுதங்கள் கிடைக்கின்றன, விமானத்தின் திறன் (capability, feauture) என்ன என்ற விவரங்களை கோருகிறார்கள். இராணுவ தளவாடங்களின் திறன் நாட்டின் ரகசியம். அதை அவர்கள் கேட்பது, அவர்கள் தெரிந்து கொள்ளவா அல்லது பாகிஸ்தானும் சீனாவும் தெரிந்து கொள்ளவா என்பது கேள்வியாகிறது.

– இந்த குழப்பத்தால் இந்தியா போர் விமானம் வாங்குவதில் காலதாமதம் ஏற்படுவதால் எதிரி நாடுகளுக்கு நன்மை, இந்தியாவுக்கு இழப்பு. காங்கிரசுக்கு அதைப்பற்றி கவலை இல்லை.

1) July 27, 2018 The Rafale dogfight – Sandeep Unnithan

Off-the-record briefings by the MoD soon after the contract for 36 Rafales was inked in 2016 indicated that a price of 7.8 billion (Rs 59,000 crore) was agreed upon for the 36 aircraft5 billion for the aircraft and 2.85 billion for its weapons and certain India-specific enhancements.

The weapons included Meteor air-to-air missiles and SCALP air-to-ground cruise missiles worth 700 million that were not part of the original MMRCA contract. These India-specific enhancements, one senior government official said in another off-the-record briefing, came at the request of the IAF and were meant to ensure optimal utilisation of a lesser number of Rafales. They included spare parts and performance-based logistics under which the Original Equipment Manufacturer (OEM) would ensure that the aircraft would be available 75 per cent of the time, and hence able to generate more sorties. It would mean the two Rafale squadrons would be equal to 3.5 squadrons of the IAF’s current mainstay, the Su-30MKIs (which have an availability of only 55 per cent). On March 12 this year, minister of state for defence Subhash Bhamre mentioned a ballpark figure of Rs 670 crore for each Rafale minus the associated equipment, weapons, India-specific enhancements, maintenance support and services. The full facts would be revealed only in the CAG report.

2) French defence major Dassault, RIL ink MoU for collaboration in defence sector

3) Full list of #Rafale offset partners. Did Rs 30,000 crore offset only go to one company/industrial house? According to these documents – NO!!! #Factcheck by @SandeepUnnithan . Are some playing a very dangerous game of politics over national security?

https://twitter.com/gauravcsawant/status/1023902393329696768
https://www.indiatoday.in/…/20180806-the-rafale-dogfight-12…
https://economictimes.indiatimes.com/…/article…/11858745.cms

“இந்திய அரசின் வேண்டுகோளின் அடிப்படையிலேயே ரிலையன்ஸை ரஃபால் போர் விமான ஒப்பந்தத்தில் சேர்த்தோம்” என்று 2012 முதல் 2017 வரை ஃபிரான்சின் ஜனாதிபதியாயிருந்த ஃப்ராஸ்வா ஹோலோங் (Francois Hollande – https://youtu.be/RwHXtMKcvr4) நேற்று மாலை திடீரென ஒரு குண்டை தூக்கி போட்டார்.

“வெளிநாட்டு நிறுவனம் இந்தியாவில் சில குறிப்பிட்ட பகுதிகளை (50%) உருவாக்க வேண்டும். அதற்கு வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களது இந்திய கூட்டாளியை (partner) அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இந்திய அரசு தலையிடாது” – இது இந்திய அரசின் மேக் இன் இண்டியாவை ஊக்குவிக்கும் ஆஃப்செட் கொள்கை.

இக்கொள்கைக்கு விரோதமாக இந்திய அரசு ரஃபால் போர் விமானம் உருவாக்கும் டஸ்ஸோ (Dassault – https://youtu.be/hafpCIAh-2A) நிறுவனத்தை ரிலையன்சுடன் கூட்டுச் சேர இந்திய அரசு வலியுறுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி ஹோலோங் சொன்னதும் எதிர்பார்த்தபடி காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பொங்கல் ஆரம்பித்தது – டாக்டர் ஸ்வாமியும் இந்த பொங்கலில் சேர்ந்தார்.

இந்திய பாதுகாப்பு அமைச்சகமும் செய்தி வந்த ஒரு மணி நேரத்துக்குள், “இந்த விவகாரத்தை விசாரிக்கிறோம்” என அறிக்கை விட்டது.

இதை தொடர்ந்து, 2 – 3 மணி நேரங்களில் ஃபிரான்சும், டஸ்ஸோ நிறுவனமும் அறிக்கை விட்டன.

ஃபிரான்ஸ்: “23 செப்டம்பர் 2016இல் இந்தியா பிரான்சுக்கு இடையே 36 ரஃபால் போர் விமானங்கள் விஷயமாக ஒப்பந்தம் கையெழுத்தானது. இது அந்த போர் விமானங்களின் தரத்தை உறுதி செய்ய மட்டுமே. பிரான்சு எந்த விதத்திலும் இந்திய நிறுவனங்களை கூட்டு சேர்த்த பிரான்சு நிறுவனங்களில் தலையிடவில்லை. இந்திய அரசு கொள்கைப்படி, பிரான்சு நிறுவனங்கள் தங்கள் இந்திய கூட்டாளிகளை தங்கள் இஷ்டப்படி சேர்க்க முழு சுதந்திரம் உள்ளது.”

– ஹோலோங் சொன்ன செய்தியை பொய் என்று பிரான்சு அரசு மேற்கூறிய அறிக்கை மூலம் உறுதி செய்தது.

டஸ்ஸோ: “இது இரு அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தம். டஸ்ஸோ நிறுவனம் 50% பாகங்களை இந்திய ஆஃப்செட் கூட்டாளியுடன் உற்பத்தி செய்ய வேண்டும் என்பது ஒப்பந்தம். ரிலையன்சுடன் கூட்டு சேருவது என்பது டஸ்ஸோவின் தன்னிச்சையான முடிவு. டஸ்ஸோவும் ரிலையன்சும் இணைந்து நாக்பூரில் உற்பத்தி ஆலை கட்டியிருக்கிறோம். ரிலையன்ஸ் தவிர, எங்கள் நிறுவனம் BTSL, DEFSYS, Kinetic, Mahindra, Maini, SAMTEL உள்ளிட்ட பல (70?) நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளோம். இது போக இன்னும் சில நூறு நிறுவனங்களுடன் கூட்டு சேர பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்”

– ஹோலோங் பேசியதின் பின்னணியில் சோனியாவின் ரஷ்ய பயணம் காரணமா என்பது பின்னர்…

1) Former French President François Hollande contradicts the Indian government. According to him, Anil Ambani (Reliance Defence) was not chosen by Dassault : “We didn’t have a choice. We took the partner that was given to us” #Rafale

2) The report referring to fmr French president Mr. Hollande’s statement that GOI insisted upon a particular firm as offset partner for the Dassault Aviation in Rafale is being verified.
It is reiterated that neither GoI nor French Govt had any say in the commercial decision.

3) Statement by the Spokesperson of the Ministry of Europe and Foreign Affairs. Paris, 21 September 2018

4) Dassault Aviation has decided to make a partnership with India’s Reliance Group. This is Dassault Aviation’s choice

https://twitter.com/ZoomIndianMe…/status/1043118171274657792
https://twitter.com/Swamy39/status/1043126800665206790
https://twitter.com/Spokesperson…/status/1043128661757415424
https://in.ambafrance.org/India-15906
https://twitter.com/FranceinIndia/status/1043219523762118656
https://www.dassault-aviation.com/…/…/rafale-contract-india/

– செல்வம் நாயகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,100SubscribersSubscribe