மெல்பர்ன் டெஸ்ட் போட்டி: புஜாரா சதம்!

Published:

australia ind test - 2026

மெல்போர்ன் : இந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்பர்னில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளை இழந்து நிதானமாக ஆடியது. அறிமுக வீரர் மயங்க் அகர்வால், சிறப்பாக விளையாடி தனது முதல் போட்டியிலேயே முதல் அரை சதத்தை பதிவு செய்தார்.

முதல்நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்திருந்தது. 2ம் நாள் ஆட்டத்தில் இன்று காலை கேப்டன் விராட் கோலி அரைசதம் கடந்தார். சத்தேஸ்வர் புஜாரா, சதம் அடித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில், இது புஜாரா அடிக்கும் 17 வது சதம்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img