01 July24 Parliment - 2026

முத்தலாக் தடை மசோதா மீது மாநிலங்களவையில் திங்கள்கிழமை இன்று விவாதம் நடைபெறுகிறது. இன்று காலை அவை துவங்கியதும், திரிணமுல் காங்கிரஸ் கட்சி முதலில் களம் இறங்கியது. இதை அடுத்து. எதிர்க்கட்சிகள் அமளியால் மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப் பட்டது.

முன்னதாக இன்று விவாதம் நடைபெறுவதால், தங்கள் எம்.பி.க்கள் தவறாது பங்கேற்குமாறு காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் அறிவுறுத்தியுள்ளன. முத்தலாக் விவகாரத்தில், கடந்த 17ஆம் தேதி அன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. வியாழக்கிழமை அன்று மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

மசோதாவில் உள்ள சில அம்சங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இதைத் தொடர்ந்து நடந்த வாக்கெடுப்பில் 245 பேர் மசோதாவுக்கு ஆதரவாகவும், 11 பேர் எதிராகவும் வாக்களித்தனர். இதனால் மக்களவையில் மசோதா நிறைவேறியது.

இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. ஆனால் மாநிலங்களவையில் பா.ஜ.க.வுக்கு உறுப்பினர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளதால், மசோதா நிறைவேற எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. 12 நியமன எம்பிக்கள் உட்பட மொத்தம் 245 உறுப்பினர்களை கொண்டது மாநிலங்களவை.. இதில், பாஜக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய, ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் உறுப்பினர்கள் 89 பேர் மட்டுமே உள்ளனர்.

காங்கிரஸ், திமுக, மதச்சார்பற்ற ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 62 உறுப்பினர்கள் உள்ளனர்.

ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!

இந்த மசோதாவில் திருத்தம் கோரும், திரிணமுல், சமாஜ்வாடி, தெலுங்கு தேசம், சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகளின் பலம் 50 க்கும் அதிகமாக உள்ளது. சுயேட்சைகளுடன் சேர்த்து மசோதாவை எதிர்ப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 120 என்பதால், இந்த மசோதா அதே நிலையில் நிறைவேறுவது சிக்கல்தான். மேலும், அதிமுக.,வுக்கும் மாநிலங்களவையில் 13 உறுப்பினர்கள் இருப்பினும், மக்களவையில் ஏற்கெனவே அக்கட்சி இந்த மசோதாவுக்கு தனது எதிர்ப்பைப் பதிவு செய்துவிட்டதால், மாநிலங்களவையில் ஆதரிப்பது சந்தேகமே!

TMC moves a motion for reference of The Muslim Women (Protection of Rights on Marriage) Bill 2018 (TripleTalaqBill), as passed by Lok Sabha, to a Select Committee of Rajya Sabha

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending