‘ரிங்கா ரிங்கா ரோசஸ்’ விளையாடி மகிழ்ந்த ஸ்மிருதி இரானி, கனிமொழி உள்ளிட்ட பெண் எம்பி.,க்கள்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
kanimozhi smiruthi irani - 2026

புது தில்லி: நாடாளுமன்றத்தில் எதிரும் புதிருமாக பேசிக் கொண்டு, சூடான வாதம் புரிந்து உசுப்பு ஏற்றி வரும் பெண் எம்.பி.,க்கள் ஒன்றுகூடி மகிழ்ந்து, ரிங்கா ரிங்கா ரோசஸ் என கை பிடித்து ஓடியாடி விளையாடும் வீடியோ ஒன்று இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது!

நாடாளுமன்றத்தில் பிப்.1ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், உணவுத் துறை மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கௌர் பாதல் தன் இல்லத்தில் எம்.பி.,களுக்கு சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த விருந்தில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உள்ளிட்ட பாஜக எம்.பிக்களும், திமுக எம்.பி கனிமொழி மற்றும் வேறு கட்சிகளைச் சேர்ந்த பெண் எம்பி.,க்களும் கலந்துகொண்டனர்.

சாப்பிட்டு முடிந்த பின்னர், சற்று நேரம் கலகலப்பாகப் பேசிக்கொண்டிருந்த பெண் எம்பி.,க்கள் திடீரென சிறுமியரைப் போல் வட்டம் போட்டு ஒருவர் கையை ஒருவர் பிடித்த படி, விளையாடி மகிழ்ந்தனர்.

இதில் திமுக எம்பி கனிமொழி, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோரும் ஒன்றாகக் கைகோத்து நடனமாடி மகிழ்ந்தனர். குறிப்பாக, ஸ்மிருதி இரானி படுவேகமாக ரிங்கா ரிங்கா ரோசஸ் ஆடிய காட்சியை இப்போதும் இணையத்தில் பலர் பாராட்டி வருகின்றனர்,

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.