‘ரபேல்’ ராகுல் பொய்களுக்கு ஹெச்.ஏ.எல்., நிறுவன தலைவர் பதில்..!

இந்தியா சற்றுமுன் தொழில்நுட்பம்

hal chief madhavan - 2026

ரபேல் போர் விமான விவகாரத்தில் உள்ளூர் நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாடிகல் நிறுவனத்தை விடுத்து, ஏன் ரிலையன்ஸுக்கு ஆர்டர் கொடுத்தார்கள் என்று கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்த ராகுலுக்கு பதில் அளித்துள்ளார் ஹெச்.ஏ.எல். தலைவர்.

ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக்கல் நிறுவனத்தின் நிதிநிலை வலுவான நிலையில் உள்ளது என்று கூறியுள்ளார் அந்நிறுவனத்தின் தலைவர் மாதவன்!

முன்னதாக, ரபேல் விவகாரத்தில் வெளிநாட்டு நிறுவனத்திற்கு விமானம் தயாரிக்க ஒப்பந்தம் கொடுத்ததால் உள்நாட்டு நிறுவனமான ஹெச்ஏஎல் நிறுவனத்தின் நிதி நிலைமை மோசமாக இருப்பதாக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியிருந்தார். இந் நிலையில் மாதவன் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறியுள்ளார்.

ரபேல் விமானம் நேரடி கொள்முதல் என்பதால் அதன் ஆப்செட் தயாரிப்பில் நாங்கள் ஆர்வம் காட்டவில்லை என்று ஹெச்ஏஎல் நிறுவனத்தின் தலைவர் மாதவன் கூறியுள்ளார்.

முன்னர், ஹெச்.ஏ.எல். நிறுவனத்தின் நிதி நிலை மோசமடையும் அளவுக்கு வைத்திருந்தவர்கள் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியினர்தானே என்று பாஜக.,வினர் குற்றம்சாட்டியிருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.