காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனர் ராபர்ட் வதேரா, லண்டனில் சொத்துகள் வாங்கிய விவகாரத்தில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தது. இந்த வழக்கில் அவரை கைது செய்ய டெல்லி சிறப்பு கோர்ட்டு 27-ந் தேதி வரை இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ராபர்ட் வதேராவுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.




