ஜெயப்பிரதா குறித்த கேள்வியால் கடுப்படைந்த ஆசம் கான், தன்னிடம் எசகுபிசகாக கேள்வி கேட்ட பத்திரிகையாளரை  படுமோசமாக நடத்தினார்.

சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரான ஆஸம்கான் ஜெயபிரதாவின் உள்ளாடை எந்த கலரில் இருக்கும் என்பது எனக்கு தெரியும் என்று  சர்ச்சைக்குரிய விதத்தில் பேசி இப்போது விழி பிதுங்கி நிற்கிறார்! அவருக்கான எதிர்ப்புகள் அதிகரித்து விட்டது அதற்கு காரணம்

பாஜக வேட்பாளராக போட்டியிடும் நடிகை ஜெயப்பிரதாவின் உள்ளாடை குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ள விவகாரத்தில், மத்திய பிரதேசத்தின் விதிஷா பகுதிக்கு வந்த ஆஸம்கானிடம்  ஒரு பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்ப அதற்கு மிகவும் கடுப்புடன் மோசமான விதத்தில் பதில் அளித்து மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளார் ஆஸம்கான்.

முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரான சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் சவுத்ரி சலீம் மரணம் அடைந்த நிலையில் விதிஷாவில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தவும் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் ஞாயிற்றுக்கிழமை வந்திருந்தார் ஆஸம் கான்!

அவர் போபாலில் தரை இறங்கியதும் அவரை செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டனர். ஞாயிற்றுக்கிழமை அப்போது நிகழ்ந்த பரபரப்பான இவரது ஜெயப்பிரதாவின் ஜட்டி கலர் எனக்குத் தெரியும் என்று கூறியதற்கு பதில் அளிக்கும் வகையில் கேள்விகளை எழுப்பினர். ஆனால் ஊடகத்தினரின் கேள்விக்கு பதில் சொல்லாமல் கடுப்படித்தபடி அங்கிருந்து விதிஷாவுக்கு சாலை வழியாக சென்றார் ஆஸம் கான்.

அங்கே கூடியிருந்த ஊடகத்தினர் கூட்டத்தை வெகு வேகமாக கடந்து சென்றார் ஆஸம் கான்!  முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரான சலீம் இவருக்கு மிகவும் நெருங்கியவர்! சலீமுக்கு மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப் பட ஆஸம் கான் பெரிதும் உதவியிருக்கிறார்!

பின்னர் இறுதிச் சடங்கு நடைபெற்ற இடத்தின் அருகில் ஒரு டிவி நிருபர் அவரிடம் மீண்டும் இதே கேள்வியைக் கேட்டார். இதனால் எரிச்சல் அடைந்த ஆஸம் கான் “உன்னுடைய தந்தை இறந்துவிட்டார்; அதற்காகத்தான் நான் இங்கே இருக்கிறேன்” என்று நிருபரைப் பார்த்து மோசமாகக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். இது ஊடகவியலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...