புதிதாக உருவாகும் புயலுக்கு ஃபானி என பெயர் சூட்டப்பட வாய்ப்பு உள்ளது. இது வங்கதேசம் சூட்டிய பெயர்.
தற்போது வங்கக் கடலில் புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது புயலாக வலுப்பெறும் என்றும், ஏப்.30, மே1 ஆகிய நாட்களில் இதனால் கனமழை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தின் அதிராம்பட்டினம் – மணல்மேல்குடி பகுதிக்கு இடையில் புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆர்வலர் செல்வகுமார் என்பவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் இது குறித்துக் கூறியவை… கஜா புயலின் போது வீசிய காற்றை விட, வேகமான அளவில் காற்று வீசக்கூடும். புயல் கரையை கடக்கும்போது கட்டுக்கடங்காத அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பு உண்டு.
தமிழகத்தை விட்டு புயல் ஆந்திரா அடுத்த ஓங்கோல் பகுதியில் தரையிறங்க குறைந்தது 2 நாட்கள் ஆகும்!
தமிழகம் முழுவதும் பல இடங்களில் கனமழைக்கும், ஒருசில இடங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்பு உண்டு என்று தெரிவித்துள்ளார்.
அடுத்து தமிழக மக்களிடம் பிரபலமான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்…