நான் தமிழன் இல்லை கன்னடன்! பிரகாஷ் ராஜ் நெத்தி அடி!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

prakashraj1 - 2026

நான் தமிழன் இல்லை கன்னடன் என்று தெளிவாகக் கூறினார் நடிகர் பிரகாஷ் ராஜ்!

தில்லியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் பிரகாஷ்ராஜ் நேற்று பிரசாரம் மேற்கொண்டார்! அப்போது அவரிடம் தில்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாகவும் தங்கள் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்தால் தமிழ் மாணவர்களின் ஆதிக்கம் முற்றிலும் ஒழிக்கப்படும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கருத்து தெரிவித்து உள்ளாரே! இதற்கு நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்!

அதற்கு பதிலளித்த நடிகர் பிரகாஷ்ராஜ், நான் ஒன்றும் தமிழன் இல்லை நான் கன்னட;ன் கேஜ்ரிவால் சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும் என்று கூறினார்!

அவருடைய இந்த பதிலைக் கேட்டதும், இந்தக் கேள்வியை எழுபிய தமிழ் ஊடகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

மோடி எதிர்ப்பு என்ற ஒற்றை வார்த்தைக்காக, நடிகர் பிரகாஷ் ராஜுக்கு கொடி தூக்கி ஆதரவு அளித்த தமிழ் அமைப்புகளுக்கு பிரகாஷ் கொடுத்த சவுக்கடி இதுதான் என்று இந்தக் கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.