காயத்துடன் ரத்தம் வடிய விளையாடிய வாட்சன் குறித்த தகவல் வெளியாகி பலரையும் ஆச்சரியப் படுத்தியுள்ளது.
ஐதராபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் இறுதி ஆட்டத்தில், மும்பையிடம் ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியை தழுவியது.
இந்தப் போட்டியில் சென்னை அணி வீரர் வாட்சன் 80 ரன்கள் விளாசி ரன் அவுட் ஆனார். இந்நிலையில், வாட்சன் ஃபீல்டிங் செய்யும் போது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டு, 6 தையல் போடப்பட்டதாகவும், அதை மீறி ரத்தம் வடிய வாட்சன் விளையாடியதாக சென்னை அணியின் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், தன் சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
காயத்தையும் பொருட்படுத்தாமல் அணிக்காக விளையாடியதற்காக வாட்சனை சென்னை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று போட்டி முடிந்து ஊருக்குக் கிளம்பிய வாட்சன் விமான நிலையத்தில் நடக்கமுடியாமல் காலைத் தாங்கித் தாங்கி நடக்கும் வீடியோ வைரல் ஆகிவருகிறது.
வாட்ஸன் 2016-ஆம் ஆண்டே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும், உள்ளூர் போட்டிகளிலும் ஐபிஎல் தொடரிலும் இன்றும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
சென்னை அணி ஒரு ரன்னில் தோற்றிருந்தாலும் அந்த ஒரு ரன் வித்தியாசம் வரை போட்டியின் முதல் ஓவரில் இருந்து கடைசி ஓவர் வரை நின்று ஆடி,, சென்னை ரசிகர்களின் ஒட்டுமொத்த அபிமானத்தைப் பெற்றுவிட்டார்.
WHAT DEDICATION?! THIS IS GOD LEVEL! You are one of a kind, champ! #WattoMan #KNEEngaVeraLevel #WhistlePodu4Ever #Yellove #WhistlePodu ???????? pic.twitter.com/0e6SycCSAu
— Chennai Super Kings (@ChennaiIPL) May 13, 2019
???????????? pic.twitter.com/FLYHSptWG8
— ⛓Ajith Selvam⛓ (@Ajithselvam97) May 13, 2019



