மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை நோக்கி, ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கமிட்ட எழு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வரும் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக, நேற்று வடக்கு 24 பர்கானா மாவட்டம் வழியாக தன்னுடைய காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சாலையோரம் நின்று கொண்டிருந்த சிலர், மம்தாவின் காரை நோக்கி, ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கமிட்டனர். இதனால் மீண்டும் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார் மம்தா பானர்ஜி.
இதை அடுத்து, திடீரென தனது காரை நிறுத்தி, விடுவிடுவென்று காரில் இருந்து இறங்கினார்.. கோஷமிட்டவர்களின் பெயர்களை குறித்துக் கொள்ளுமாறு பாதுகாவலர்களிடம் கட்டளை இட்டார். பின்னர் காரில் ஏறிய மம்தாவை நோக்கி, அவர்கள் மீண்டும் ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட்டனர்.
இதை அடுத்து மேலும் கோபம் அடைந்தார். மம்தா. தன்னிலை மறந்த நிலையில் காருக்குள் இருந்து இறங்கினார். அருகில் இருந்தவர்களை கைநீட்டி எச்சரிக்கை செய்தார்.
பிஜேபியினரும் வெளி நபர்களும் தான் இப்படி முழக்கம் போடுகின்றனர், என்னை அவமதிக்கவே இவ்வாறு கோஷம் போடுகின்றனர் என்றெல்லாம் கத்தித் தீர்த்துவிட்டு, கார் ஏறிச்சென்றார்.
இந்த வீடியோ இப்போது வைரலாக பரவி வருகிறது .முன்னரும் இதே போல்தான் ஒரு வீடியோ வைரலானது.
இந்நிலையில், மம்தா பானர்ஜியின் புகாரை அடுத்து, பாதுகாவலர்கள் ஏழு பேரை அடையாளம் கண்டு, கைது செய்துள்ளனர்.
இதனிடையே, மற்ற மாநிலங்களில் தவறு செய்தால் போலீஸ் ஸ்டேஷனுக்கு போகலாம், மேற்கு வங்கத்தில் மட்டும் ஜெய்ஸ்ரீராம் சொன்னால் போதும்,. சிறைக்குப் போகலாம், போலீஸ் உங்களைத் தேடி வீட்டுக்கு வரும் என்று சமூக வலைத்தளங்களில் கலாய்க்கிறார்கள்.




