கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ்? சந்தேகத்தின் பேரில் கல்லுாரி மாணவருக்கு சிகிச்சை…!

Published:

neeba virs 2 - 2026

கேரளாவில் நிபா வைரஸ் தாக்கியிருக்ககூடும் என்ற சந்தேகத்தின் பேரில் கல்லுாரி மாணவர் ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

கேரளாவில் கடந்த ஆண்டு நிபா வைரஸ் காய்ச்சல் பரவி கோழிக்கோடு மற்றும் மலப்புறம் மாவட்டங்களில் பலர் பரிதாபமாக உயிரழந்தனா். டெரோபஸ் குடும்பத்தைச் சேர்ந்த பழந்தின்னி வவ்வால்களில் மூலம் பரவும் இந்த வைரஸ் கடந்த ஆண்டு கேரளாவை உலுக்கி வந்தது.

மலேசிய நாட்டில் முதன்முதலில் கண்டறிப்பட்ட இந்த வைரஸ் அங்கிருந்து கேரளா வந்திருக்கலாம் என கருத்தப்பட்டது.

கோழிக்கோடு மாவட்டம் பெரும்பாரா பகுதியில் உள்ள சூபிக்கடா கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்குதான் முதலில் இந்த வைரஸ் தாக்கியது, கடும் காய்ச்சல் ஏற்பட்டு இவர்கள் மூன்றுபேரும் உயிரிழந்துள்ளனா்.

அவர்களில் ஒருவருக்கு சிகிச்சை அளித்த செவிலியரும் லினியும் பரிதாபமாக இறந்தார்.

இதனையடுத்து கோழிக்கோடு மற்றும் மலப்புறம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சலால் பாதித்து மேலும் பலா் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனா்.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

புனேயில் உள்ள தேசிய வைராலஜி சோதனைக் கூடத்தில் சோதனை செய்யப்பட்டு கேராளவில் நிபா வைரஸ் பரவியது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்டு்ள்ள சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அவரது ரத்த மாதிரி புனேயில் உள்ள தேசிய வைராலஜி ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் இன்னும் வந்து சேர வில்லை.

இது குறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா கூறுகையில் ‘இடுக்கி மாவட்டம் தொடுபுழாவைச் சேர்ந்த கல்லுாரி மாணவர் ஒருவருக்கு நிபா வைரஸ் காயச்சல் தாக்குதல் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவரத ரத்த மாதிரி புனே தேசிய வைராலஜி ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதன் முடிவு வந்த பிறகே உறுதி செய்ய முடியும்.

நான்கு நாட்களாக காய்ச்சல் வந்த நிலையில் திருச்சூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகே கல்லுாரி மாணவருக்கு நிபா வைரஸ் காய்ச்சல் இருக்ககூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!

அந்த மாணவருடன் சேர்ந்து தங்கிய சிலருக்கும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவதால் அவர்களையும் மருத்துமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related articles

Recent articles

spot_img