spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாநீட் தேர்வில் தமிழகத்தில் 48.57 சதவீதம் பேர் தேர்ச்சி....!

நீட் தேர்வில் தமிழகத்தில் 48.57 சதவீதம் பேர் தேர்ச்சி….!

NEET
நீட் தேர்வு முடிவுகள் இன்று மதியம் வெளியானது. அதில் தமிழகத்தில் 48.57 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நீட் தேர்வு முடிவுகள் வெளியானது – தமிழகத்தில் 48.57 சதவீதம் தேர்ச்சி

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (நீட்) முடிவின் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இந்த நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.

இந்த தேர்வு கடந்த மாதம் 5-ம் தேதியும், 20-ம் தேதியும் இரண்டு கட்டமாக நடைபெற்றது. நாடு முழுவதும் சுமார் 14 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதியிருந்தனர். தமிழகத்தில் மட்டும் 1.40 லட்சம் பேர் தேர்வெழுதி உள்ளனர்.

இதற்கிடையே, நீட் தேர்வு முடிவு புதன்கிழமை வெளியிடப்படும் என்றும், தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தேர்வர்கள் பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள் இன்று மதியம் வெளியிடப்பட்டது.

தேர்வு முடிவுகளை www.nta.ac.in, www.ntaneet.nic.in என்ற இணைய தளங்களில் அறிந்து கொள்ளலாம்.

இதில் தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 48.57 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe