புகழ்பெற்ற குருவாயூர் கோவிலில் பிரதமர் மோடி இன்று வழிபட்டார். ஸ்ரீகிருஷ்ண தரிசனத்திற்குப் பிறகு தனது எடைக்கு நிகராக தாமரை மலர்களை காணிக்கையாக வழங்கினார்.
தில்லியில் இருந்து இன்று காலை தனி விமானம் மூலம் கொச்சி வந்த பிரதமர் மோடி, கடற்படை சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் இன்று காலை குருவாயூர் வந்தடைந்தார்.
வேட்டி அணிந்து வந்திருந்த பிரதமர் மோடி, குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவில் அருகே உள்ள விருந்தினர் இல்லத்திற்கு சென்று, துண்டு போர்த்தியபடி கோவிலுக்கு வந்தார்.
அவருடன் கேரள மாநில ஆளுநர் சதாசிவம் மற்றும் அம்மாநில பாஜக முக்கிய நிர்வாகிகளும் வந்தனர்.
ഗുരുവായൂര് ക്ഷേത്രം ദിവ്യവും പ്രൗഢഗംഭീരവുമാണ്. ഇന്ത്യയുടെ പുരോഗതിക്കും സമൃദ്ധിക്കും വേണ്ടി ചരിത്രപ്രസിദ്ധമായ ഈ ക്ഷേത്രത്തില് പ്രാര്ത്ഥിച്ചു pic.twitter.com/fQpK3JWuB7
— Narendra Modi (@narendramodi) June 8, 2019
குருவாயூர் கோவிலில் பிரதமர் மோடிக்கு பூர்ண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் குருவாயூர் கோவிலுக்குள் வந்து பிரதமர் மோடி வழிபட்டார். ஸ்ரீகிருஷ்ண தரிசனத்திற்குப் பிறகு தனது எடைக்கு நிகராக தாமரை மலர்களை வழங்கி துலாபார நேர்த்திக் கடனை நிறைவேற்றினார்.
அதன் பின்னர் கூட்டத்தில் பேசினார் பிரதமர் மோடி.
Speaking in Guruvayur. Watch. https://t.co/evfCpP7Tht
— Narendra Modi (@narendramodi) June 8, 2019




