தமிழக விவசாயிகள் ரூ.6000 மானியம் பெறுவதில் உள்ள தடைகளை களைய வேண்டும்; ராமதாஸ் வலியுறுத்தல்…!

Published:

RAMADAS 2 1 - 2026

 

 

விவசாயிகள் ரூ.6000 மானியம் பெறுவதில் உள்ள தடைகளை களைய வேண்டும் என பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறித்தி உள்ளார்.

இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘மத்திய அரசு செயல்படுத்தி வரும் பிரதமரின் விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரூ.6000 நிதி உதவியை தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான விவசாயிகளால் பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இத்திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள், இத்திட்டத்திற்கான அடிப்படை தகுதிகளை நிறைவேற்றுவதில் உள்ள சிக்கல்களே இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும்பான்மை சமூகமாக உள்ள விவசாயிகள், பொருளாதார அடிப்படையில் தன்னிறைவு பெறுவது பெறும் சவாலாக இநருந்து வருகிறது.

விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை வழங்கப்படாதது. வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவது, உரம், விதைகள் உள்ளிட்ட இடுபொருட்களின் விலைகள் பெருமளவில் உயர்ந்திருப்பது ஆகியவற்றால் வேளாண் தொழிலில் லாபம் என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.

இதனால் விவசாயிகளின் தற்கொலை அதிகரித்து வரும் நிலையில் விவசாயிகளின் துயரத்தை ஓரளவாவது குறைக்கும் நோக்கில் தான் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 வீதம் மானியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கடந்த 3 ஆண்டுகளாக பாமக வலியுறித்தி வந்தது.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

அதையொட்டி தான் சிறுகுறு விவசாயிகளுக்கு தலா ரூ.6000 நிதி வழங்கப்படும், ஆண்டுக்கு 3 தவணைகளில் இது வழங்கப்படும் என்று இடைக்கால நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு அறிவித்தது.

மத்திய அரசு அறிவித்த திட்டத்தின்படி தமிழகத்தில் 75 லட்சம் விவசாயிகளுக்கு இந்த நிதி உதவி கிடைத்திருக்க வேண்டும்,

ஆனால் தமிழக அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி முதற்கட்டமாக தமிழக விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் ரூ.277 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதைக் கொண்டு 13.85 லட்சம் விவசாயிகளுக்கு மட்டும் தான் மத்திய அரசின் நிதி உதவி வழங்கப்பட்டது.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் கூட தமிழகத்தில் தகுதி உள்ள 75 லட்சம் விவசாயிகளில் 22 லட்சம் விவசாயிகளின் ஆவணங்கள் மட்டும் சரிபார்க்கப்பட்டு மத்திய அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி 53 லட்சம் விவசாயிகளுக்கு அதாவது தகுதி உடைய விவசாயிகளில் 70.86 விழுக்காட்டினருக்கு பிரதமாின் விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தின் கீழ் பயன் கிடைக்கவி்ல்லை

இதற்கான முதன்மைக் காரணம் இந்தத் திட்டத்தின் கீழ் நிதிஉதவி பெறுவதற்கான நிபந்தனைகளை விவசாயிகளால் பூர்த்தி செய்ய முடியாததுதான்.

ALSO READ:  தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்!

இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6000 உதவி பெற விண்ணப்பிக்கும் விவசாயி பெயரில் தான் நிலத்தின் பட்டா இருக்க வேண்டும், அத்துடன் குடும்ப அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றையும் விவசாயிகள் தாக்கல் செய்ய வேண்டும் ஆனால் பெரும்பாலான விவசாயிகளுக்கு அவா்களின் நிலங்களுக்கான பட்டா அவா்களின் பெயரில் இருப்பத்தில்லை.

தமிழகத்தில் நில ஆவணங்கள் முழுமையாக சரிபார்க்கப்படாதத, ஒரு குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தை அதன் வாரிசுகள் தங்களுக்குள் பிரித்துக் கொண்டாலம், அதை அவா்கள் பதிவு செய்து தங்கள் பெயரில் பட்டா வாங்கத் தவறியது, நிலங்களை விலைக்கு வாங்கினாலும் அதை பத்திரபதிவு செய்வதுடன் தங்கள் கடமை முடிந்து விட்டதாக கருதி பட்டா வாங்க மறந்த விடுவது போன்றவைதான் நில ஆவணங்கள் துல்லியமாக இல்லாததற்கு காரணமாகும்,

இதை சரிசெய்ய கடந்த காலங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவை முழுமையான பலனைத் தராததால் சிக்கல்கள் நீடிக்கிறது.

மத்தியில் நரேந்திரமோடி தலைமையிலான அரசு மீண்டும் பதியேற்ற பின்னர், சிறு, குறு விவசாயிகளுக்கு மட்டும் செயல்படுத்தப்பட்டு வந்த இந்தத் திட்டம் அனைத்து விவசாயிகளு்கும் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

அதன்படி தமிழகத்தில் பயனாளிகளின் எண்ணிக்கை 81.18 லட்சமாக உயரும் இவர்களில் 25 சதவீதத்துக்கும் குறைவானவா்களுக்கு மட்டும் நிதி உதவி வழங்கப்பட்டால், அத்திட்டம் செயல்படுத்தப்படுவதற்கே அா்த்தம் இல்லாமல் போய்விடும் விவசாயிகளின் துயரங்களும், தற்கொலைகளும் தொடா்கதையாகி விடும்.

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

எனவே விவசாயிகளுக்கு பட்டா மாறுதல் செய்து வழங்க சிறப்பு இயக்கத்தை அரசு நடத்த வேண்டும். கிராம அளவில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்து, அதில் உரிய ஆவணங்களை அளிக்கும் விவசாயிகளுக்கு பட்டா மாறுதல் செய்து, பிரதமரின் நிதி உதவித் திட்ட பயனாளிகள் பட்டியலில் பெயரைச் சேர்க்க வேண்டும்.

தகுதி உடைய சிறு. குறு விவசாயிகளுக்கு டிசம்பர்–மார்ச் காலத்திற்கான ரூ.2000 நிதியை நிலுவைத் தொகையாக கணக்கிட்டு வழங்கவும் மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Related articles

Recent articles

spot_img