சின்னச் சின்ன குடும்பத்தகராறுகள் இப்போது கொலையில் முடிகின்றன. கோவிலுக்கு தன்னிடம் சொல்லாமல் சென்று வந்த மனைவியை ஆத்திரத்தில் அடித்து கொலை செய்து விட்டு கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்துள் நயினாரகரம் ஊரைச்சேர்ந்தவா் பழனிச்சாமி, பிச்சம்மாள் தம்பதியினா்.
பழனிச்சாமி நயினாரகரம் பேரூந்து நிறுத்தம் அருகில் தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார்.
மனைவி பிச்சம்மாள் ஊர்மேலழகியான் என்ற ஊரில் சத்துணவு ஆசிரியராக வேலைபாரத்து வருகிறார்.
இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனா். இந்நிலையில் வேலைக்கு விடுமுறை எடுத்திருந்த பிச்சம்மாள் உறவினா்களோடு அருகில் உள்ள இலத்துார் ஒத்தபனை சுடலைமாடசாமி கோவிலுக்கு சென்றுவி்ட்டு ஊருக்கு உறவினா் வாகனத்தில் திரும்பி வந்துள்ளார்.

இவர் கணவனிடம் சொல்லாமல் கோவிலுக்கு சென்று வி்ட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனைவியின் மேல் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
மேலும் பழனிச்சாமிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அதிகமான மதுப்போதையில் இருந்த பழனிச்சாமி என்னிடம் சொல்லாமல் ஏன் கோவிலுக்கு சென்று வந்தாய் என கேட்டு தகராறு செய்துள்ளார்.
இதனைதொடா்ந்து இருவருக்கும் வாய் தகராறு முற்றிய நிலையில் பழனிச்சாமி மனைவி பிச்சம்மாளை ஆத்திரத்தில் பலமாக தாக்கியுள்ளார்.
கணவரின் தாக்குதலில் படுகாயம் அடைந்த பிச்சம்மாள் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
மனைவியை தாக்கியதில் அவர் பலியானது போதை மயக்கத்தில் இருந்த பழனிசாமிக்கு தெரிய வரவே தான் மனைவியை அடித்து கொலை செய்து விட்டோம் என்ற அச்சத்திலும் ஜெயிலுக்கு போக வேண்டுமே என்ற பதற்றத்திலும் இருந்துள்ளார்.
அதனைதொடா்ந்து மதுப்போதையில் இருந்த பழனிச்சாமியும் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தப்போது இருவரும் இறந்த நிலையில் இருப்பதைக்கண்ட உறவினர்கள் காவல்துறைக்கு தகவல் செல்லவே விரைந்து வந்த போலீசார் இருவரது உடலையும் மீட்டு தென்காசி மாவட்ட மருத்துவமனைக்கு உடற்க்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



