ஆந்திர போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு

ஆந்திர போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு

red-sanders-killed-andhra ஹைதராபாத்: திருப்பதியை அடுத்த சேஷாசலம் சீனிவாசமங்காபுரம் வனப் பகுதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி, தமிழகத்தைச் சேர்ந்த 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், அந்த மாநில சிறப்பு அதிரடிப்படை போலீஸாருக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆந்திர உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, ஆந்திர மாநில அரசு இதனைத் தெரிவித்தது. தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கு, ஆந்திர உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கல்யாண் ஜோதி சென்குப்தா, நீதிபதி பி.வி. சஞ்சய் குமார் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது ஆந்திர அரசின் சார்பில் கூடுதல் அரசுத் தலைமை வழக்குரைஞர் (ஏ.ஏ.ஜி.) டி. ஸ்ரீநிவாஸ் ஆஜராகி வாதாடினார். அப்போது அவர், இந்தச் சம்பவம் தொடர்பாக இ. த. ச. பிரிவு 302 (கொலை), 364 (கடத்தல் அல்லது கொலை செய்வதற்காக கடத்தல்), 34 (பொதுவான உள்நோக்கத்துடன் பல்வேறு நபர்கள் கூட்டாகச் செயல்படுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் பெயர்கள் குறிப்பிடப்படாத, ஆந்திர மாநில சிறப்பு அதிரடிப்படை போலீஸார் மீது, ஆந்திர போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொல்லப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த சசிகுமாரின் மனைவி முனியம்மாள் அளித்த புகாரின் அடிப்படையில், முதல் தகவல் அறிக்கையை ஆந்திர போலீஸார் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பதற்கான நடவடிக்கையிலும் ஆந்திர அரசு ஈடுபட்டுள்ளது என்றார்.

மேலும் செய்திகள்

ஏலச்சீட்டு நடத்தி மோசடி: ரூ.1.50 கோடி சுருட்டிய ஹோட்டல் உரிமையாளர் கைது

உள்ளூர் செய்திகள், சற்றுமுன், சென்னை

ஏலச்சீட்டு நடத்தி மோசடி: ரூ.1.50 கோடி சுருட்டிய ஹோட்டல் உரிமையாளர் கைது சென்னை: ஏலச்சீட்டு நடத்தி ரூ.1.50 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் சென்னையில் கைது செய்யப்பட்டார். சென்னை ஆயிரம்…