ஜகன் அள்ளித் தெளிக்கும் வாக்குறுதிகளைப் பார்த்தால் பயமாக இருக்கிறது! : முன்னாள் முதல்வர் விமர்சனம்!

Published:

jaganmohan - 2026

ஜெகன் அள்ளித்தெளிக்கும் வாக்குறுதிகளை பார்த்தால் பயம் ஏற்படுகிறது என்று, ஆந்திராவின் முன்னாள் முதல்வர் விமர்சனம் செய்துள்ளார்.

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அளித்துவரும் வாக்குறுதிகளும் எடுத்துவரும் திட்டங்களும் பயமுறுத்துகின்றன என்று முன்னாள் முதலமைச்சர் ‘நாதெள்ள பாஸ்கர் ராவு’ விமர்சித்தார்.

ஜெகனின் ஒரு மாத கால ஆட்சி எவ்வாறு உள்ளது என்று தன்னால் இப்போதே கூற இயலாது என்று கருத்து கூறிய அவர், ஆனால் ஜெகன் எடுத்து வரும் பல முடிவுகளோடு தனக்கு உடன்பாடு இல்லை என்று விமர்சனம் செய்தார்.

அம்மா மடி, விவசாயிகளுக்கு முதலீட்டுக்காக பணம் அளிப்பதாக ஜகன் அறிவித்தது போன்றவற்றுக்கு நிதி எங்கிருந்து வரும் என்று தனக்குப் புரியவில்லை என்றார்.

ஆந்திரப் பிரதேச மாநிலம் ஏற்கெனவே இரண்டரை லட்சம் கோடிகள் கடனில் இருக்கிறது! இப்படிப்பட்ட நேரத்தில் இதுபோன்ற வாக்குறுதிகள் அளிப்பது சரியல்ல என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.

கிராமங்களில் தன்னார்வலர்களை நியமிப்பது குறித்த ஆலோசனை கூட வெற்றி பெறும் என்று தான் நினைக்கவில்லை என்று பாஸ்கர் ராவ் தெரிவித்தார். கிராமத்தில் இந்த அமைப்பு மேலும் பல புதிய பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் வாய்ப்புள்ளது என்றார் அவர்.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

அமைச்சரவையில் அனுபவம் வாய்ந்த மனிதர்கள் இருக்க வேண்டிய தேவை உள்ளது. ஆனால் ஜெகனின் கேபினெட் அவ்வாறு இல்லை! ஆனால் மக்களுக்கு ஏதோ நன்மை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் ஜெகனிடம் தெரிகிறது! அவ்வளவுதான்..! என்று கூறினார்  பாஸ்கர் ராவ்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img