மும்பை: ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகளின் பெயர் அடங்கிய ஐ.டி.யில் இருந்து கொலை மிரட்டல் இமெயில் வந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப் பட்டு வருகிறது. ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனுக்கு, [email protected] என்ற இமெயில் முகவரியிலிருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது என்று மும்பை போலீஸாரிடம் இருந்து தகவல் கசிந்துள்ளது. ரகுராம் ராஜனின் இ-மெயிலுக்கு வந்த இந்த கொலை மிரட்டலில், “உங்களைக் கொல்ல எனக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. எனக்கு கொடுக்கப்பட்டதைவிட, நீங்கள் அதிகமாகக் கொடுத்தால், நாம் இதுகுறித்து பேசி முடிவு எடுக்க முடியும்” என்று இ-மெயில் தெரிவிக்கப்பட்டு உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. ரகுராம் ராஜனுக்கு மிரட்டல் கடிதம் வந்ததை மும்பை காவல் ஆணையர் ராகேஷ் மரியா உறுதிசெய்துள்ளார். இது குறித்து புகார் வரப்பெற்றதாகவும், இ-மெயில் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பெயரில் வந்துள்ளதாகவும், இந்த விவகாரத்தை லேசாக எடுத்துக் கொள்ளாமல், குற்றவாளியை கண்டுபிடிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் ராகேஷ் மரியா தெரிவித்துள்ளார். இந்த இமெயில் மிரட்டல் குறித்த விசாரணை சைபர் க்ரைம் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இமெயில் முகவரி தொடர்பான அனைத்து தகவல்களையும் அளிக்குமாறு கோரி கூகுள் நிறுவனத்தை சைபர் க்ரைம் பிரிவு அணுகியுள்ளது.
ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனுக்கு கொலை மிரட்டல்: ஐ.எஸ். இயக்கம் இமெயில்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari