
சத்தம் போட்டு அழுததால் குழந்தையை தரையில் அடித்துக்கொன்ற குடிகார தந்தையை போலீசார் கைது செய்தனா்.
மத்திய பிரதேச மாநிலம் ஜபால்பூர் பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு மூன்று பெண் குழந்தைகள், இந்நிலையில் நான்காவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில் வீட்டில் மூன்று பெண் குழந்தைகளும் தந்தையும் மட்டுமே இருந்துள்ளனா். கடந்த வியாழக்கிழமை அன்று இரவு தந்தை அளவுக்கு மீறிய குடிபோதையில் வீட்டுற்கு வந்துள்ளார்.
அப்போது மூன்றாவது பெண் குழந்தையான ஒன்றரை வயது குழந்தை அதிக பசியால் துடித்து சத்தமிட்டு அழுது கொண்டே இருந்துள்ளது.
குழந்தையை சமாதானப்படுத்த முடியாமல் கோபமடைந்த குடிகார தந்தை, அக்குழந்தையை தரையில் ஓங்கி துாக்கி அடித்துள்ளார்.
இதில் சம்பவ இடத்ததிலேயே ஒன்றரை வயது பெண் குழந்தை பரிதாபமாக இறந்துள்ளது.
இதனையடுத்து உயிரிழந்த குழந்தையின் உடலை அருகில் உள்ள சாக்கடையில் ஒளித்து வைத்துள்ளார். அந்த கொடூர தந்தை.
வெள்ளிக்கிழமை அன்று காலை துப்பரவு பணிக்காக வந்த பணியாளா்கள் சாக்கடையில் குழந்தையின் உடல் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனா்.
இதனைதொடா்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அதனை தொடா்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் குடிகாரத் தந்தையே குழந்தையை அடித்துக் கொன்றது தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
குழந்தையின் கொலையை நேரில் பார்த்த 3 மற்றும் 5 வயதான மற்ற இரு குழந்தைகளுகம் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனா்.
அளவுக்கு மீறிய போதையால் தான் பெற்ற பிஞ்சுக் குழந்தையை கொடூரமாக தந்தையே கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



