உதயநிதிக்கு ‘நோ’… கட்சி கறார்! ஆக… ஆக… புகழேந்தி விக்கிரவாண்டி வேட்பாளர் ஆனார்!

Published:

pugazendhi dmk - 2026

உதயநிதியை விக்கிரவான்டி வேட்பாளராக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தார் கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின்! கட்சிக்காக உழைத்தவருக்கே வாய்ப்பு என்று கறாராகக் கூறி, புகழேந்தி வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளார்.

கட்சியில் தீவிரமாக பணியாற்றி வருவபவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற அடிப்பைடியில் விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளராக, நா.புகழேந்தியை அறிவித்துள்ளது திமுக தலைமை.

20-8-1954 இல் பிறந்தவர் புகழேந்தி. இவர், 1973ல் கட்சியில் உறுப்பினர் ஆனார். அவருக்கு ஒரு மகன் மூன்று மகள்கள் உள்ளனர்.

கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்தவர் புகழேந்தி. அத்தியூர் பிரதிநிதி கிளை செயலாளர், மாவட்ட பிரதிநிதி, கோலியனூர் ஒன்றிய பொறுப்பாளர், பொதுக்குழு உறுப்பினர், செயற்குழு உறுப்பினர், 2 முறை ஒன்றியச் செயலாளர், ஒருங்கிணைந்த மாவட்ட பொருளாளர், மத்திய மாவட்ட பொருளாளர், 1986ம்ஆண்டு ஊராட்சி மன்ற தலைவர், 1996 ஆம் ஆண்டு கோலியனூர் ஒன்றிய தலைவர் என பல பதவிகளை வகித்தவர். இப்போது விக்கிரவாண்டி தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளார்.

தமிழகத்தில் காலியாக உள்ள இரு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறும் சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றரை வருடங்களுக்குத்தான் பதவியில் இருக்க இயலும் என்பது குறிப்பிடத் தக்கது. அடுத்து 2021ல் சட்டமன்றத் தேர்தல் வந்துவிடும்!

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

Related articles

Recent articles

spot_img