
ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்கள் புதிதாக உதயமாகியுள்ள நிலையில், இந்தியாவின் அதிகாரபூர்வ புதிய வரைபடத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு தற்காலிகமாக சிறப்பு அந்தஸ்து அளிக்க வகை செய்த சட்டப் பிரிவு 370 திரும்பப் பெறப்பட்ட பின்னர், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்கள் அக்டோபர் 31 ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக உதயமாகின.
இந்நிலையில் இந்தியாவின் புதிய அரசியல் வரைபடத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இரு யூனியன் பிரதேசங்களின் நிர்வாக எல்லைகள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி இந்தியாவின் மொத்த மாநிலங்களின் எண்ணிக்கையில் ஒன்று குறைந்து 28 ஆனது. அதே நேரம் யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 2 அதிகரித்து 9 ஆனது.
இந்நிலையில், இந்த அதிகாரபூர்வ வரைபடத்தையே கல்வி நிறுவனங்கள், அரசியல் அமைப்புகள் என அனைத்தும் பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத் தக்கது.