தேர்தல் வெற்றி குறித்து கனிமொழி தொடர்ந்த மனு! தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்!

உரத்த சிந்தனை சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
KANIMOZI MP 1 - 2026

சென்னை: தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி கனிமொழி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தூத்துக்குடி மக்களவை தேர்தல் தொடர்பாக வெற்றியை எதிர்க்கும் வாக்காளர் மனுவை நிராகரிக்கக் கோரி கனிமொழி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்.

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில், திமுக எம்.பி., கனிமொழி வெற்றி பெற்றதை எதிர்த்து, அத்தொகுதியை சேர்ந்த வாக்காளர் சந்தானகுமார் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

mk kanimoze - 2026

இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி கனிமொழி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில், இரு தரப்பிலும் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில், கனிமொழி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

கனிமொழியின் கோரிக்கை நிராகரிப்பால் வெற்றியை எதிர்க்கும் சந்தானகுமார் மனு மீது விசாரணை தொடரும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.