செஞ்சுரியன் பல்கலைக்கழகம் நடிகர் கமலஹாசனுக்கு கௌரவ டாக்டா் பட்டம் அறிவித்துள்ளது.

அடடே... அப்படியா? இந்தியா உள்ளூர் செய்திகள் சினி நியூஸ் சினிமா சுய முன்னேற்றம் சென்னை பொது தகவல்கள்
KAMAL 1 - 2026


தமிழ் திரையுலம் மட்டுமின்றி இந்திய திரையுலகிலும் சிறப்பாக நடித்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். 65 வயதாகும் கமல்ஹாசன் திரைத்துறையில் 60 ஆண்டுகளாக நடித்து வருகிறார்.

கடந்த நவம்பர் 7ஆம் தேதி கமல்ஹாசன் சினிமாவில் நடிக்க தொடங்கி அறுபது வருடங்கள் நிறைவடைந்தது.

இதனை கொண்டாடும் வகையில் ‘உங்கள் நான்’ என்றொரு நிகழ்ச்சியும் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இதில் ரஜினிகாந்த், ஜெயம் ரவி, நடிகர் கார்த்தி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு, கமல்ஹாசனை பாராட்டினர். இளையராஜாவின் இசை கச்சேரியும் நடைபெற்றது.

திரைத்துறையில் சிறப்பாக பணியாற்றும் இவர் தேசிய விருது, பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக ஒடிஷா மாநிலத்தில் உள்ள செஞ்சுரியன் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

ஒடிசாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) செஞ்சுரியன் தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடக்கிறது.

இந்த விழாவில் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்குகிறார்.

கமலஹாசனும் ஒடிசாவின் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.