கல்யாணமான ஒரே வாரத்தில்… கணவனுக்கு ‘மோரில்’ விஷம் கொடுத்த ‘தர்ம பத்தினி’!

Published:

husband rescued poison - 2026

கணவனுக்கு மோரில் விஷம் கலந்து கொடுத்த புதுமணப் பெண் குறித்த பரபரப்பு இப்போது ஆந்திர மாநிலத்தை ஆட்டிப் படைக்கிறது!

நூறாண்டு வாழவேண்டிய மண வாழ்க்கையை 7 நாட்களில் முடிக்க நினைத்தாள் அந்த இளம் மனைவி.

கர்னூல் மாவட்டம் ‘மதனந்தபுர’த்தைச் சேர்ந்த நாகமணிக்கும், ‘துக்கலி’ மண்டலம் ‘ஜொன்னகிரி’ யைச் சேர்ந்த லிங்கமய்யா வுக்கும் திருமணம் நடந்தது. பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக இந்த திருமணம் நடந்துள்ளதாகக் கூறப் படுகிறது.

மணமாகி ஒரே வாரத்திற்குள் நேற்று திங்கள் கிழமை அன்று மோரில் விஷம் கலந்து கொடுத்து கணவரைக் கொல்ல முடிவு செய்தாள் நாகமணி. அதன்படியே செய்தாள்.

உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த லிங்கமய்யாவைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், ‘குத்தி’ அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்! சரியான நேரத்துக்கு மருத்துவமனைக்கு எடுத்து வந்ததால் லிங்கமய்யா உயிர் பிழைத்தார்.

திருமணத்திற்கு முன்பே அந்தப் பெண் வேறு ஒருவரை காதலித்த விவரம் தற்போது தெரியவந்துள்ளது. முதல் நாள் இரவு லிங்கமய்யாவோடு நாகமணி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. மறுநாள் இவ்வாறு மோரில் விஷம் கலந்து கொடுத்துள்ளார்…

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img