
ஒத்தக்கி ஒத்த… பாக்கலாம் … சவால்… என்றெல்லாம் பாஜக.,வைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் நடிகையுமான காயத்ரி ரகுராம் கூறியிருந்தார். அதன் படி, இன்று (நவ.27) காலை 10 மணிக்கு காயத்ரி ரகுராம் மெரினா கடற்கரைக்கு வந்தார். ஆனால் அங்கே திருமாவளவனோ, அவரது கட்சியினரோ எவரும் வரவில்லை.
இதை அடுத்து, தனது சவாலை எதிர்கொள்ள பயந்து திருமாவளவனும், அவரது கட்சியினரும் டேக்கா கொடுத்து நைஸா கழன்று கொண்டதை உறுதி செய்த காயத்ரி ரகுராம், வெகு நேரம் காத்திருந்து, பின்னர் வீடு திரும்பினார்.

தனது மெரினா காத்திருப்பு தொடர்பாக, காயத்ரி ரகுராம் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.
அதில் அவர், “இன்றைய தினம் மெரினா கடற்கரையில் திருமாவளவனை சந்திப்பதற்காக நான் காத்திருந்தேன். ஆனால் திருமாவளவனை காணவில்லை. அவரிடம் இருந்து எந்தத் தகவலும் வரவில்லை. இதனால் திருமாவளவன் கட்சி தொண்டர்களை நான் ஏமாற்றும் படி ஆகிவிட்டது. உங்கள் அனைவருக்கும் எனது அன்பை தெரிவித்துக் கொள்கிறேன். இனிமேல் ஜாதி, மதம் போன்றவற்றை இழிவாக எந்த எம்பியும், கட்சித் தலைவர்களும் பேச மாட்டார்கள் என்று நம்புகிறேன். ஓர் உண்மையான தலைவன் என்பவன், அனைவரையும் சமமாக பார்க்க வேண்டும். நீதி வெல்லும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.



