
இனி ஆண்டுக்கு பத்து நாள் வைகுண்ட மார்க்க தரிசனம். திருமலை ஸ்ரீ வேங்கடேஸ்வர சுவாமி பக்தர்களுக்கு இனி நிம்மதிதான்!
வைகுண்ட தரிசனம் செய்துகொண்டு ஏழுமலையானை ஆசை தீர பார்க்க வேண்டும் என்பது பக்தர்களின் விருப்பம். ஆனால், வைகுண்ட ஏகாதசி, துவாதசி போன்ற முக்கிய நாட்களில் மட்டுமே ஸ்ரீவாரு பாலாஜியை வைகுண்ட மார்க்கம் வழியே சென்று தரிசிக்க வகை உண்டு.
ஆனால் கூட்டம் அதிகம் இருப்பதால் அனைவருக்கும் அது சாத்தியப்படுவதில்லை. இனி இந்த நிலை மாறப் போகிறது. இனி ஆண்டுக்கு 10 நாட்கள் ஸ்ரீபாலாஜியை வைகுண்ட மார்க்கம் வழியே தரிசிக்கும் ஏற்பாட்டினை திருமலை திருப்பதி தேவஸ்தானம் பரிசீலித்து வருகிறது.

திருமலை திருப்பதி தேவஸ்தான ஆகம அறிவுரை மண்டலி கூட இதற்கு கிரீன் சிக்னல் கொடுத்து விட்டது. இனி அதிகார மண்டலியின் ஒப்புதல் கிடைப்பதுதான் பாக்கி.அதிக அளவில் பக்தர்களுக்கு வைகுண்ட மார்க்கம் வழியே தரிசனம் ஏற்படுத்திக் கொடுப்பதற்கு இந்த வழிமுறையை
ஏற்படுத்த இருப்பதாக தெரியவந்துள்ளது.
எல்லாம் சரியாக வந்தால், ‘வைகுண்ட துவார மகோற்சவம்’ என்ற பெயரில் 10 நாட்களுக்கு இந்த முறையைத் தொடங்க உள்ளார்கள். அதிகார மண்டலி கூட்டத்தில் உறுப்பினர்களின் ஒப்புதல் கிடைத்து விட்டால் இந்த ஆண்டிலிருந்தே இதற்கு பிள்ளையார் சுழி போட உள்ளார்கள்.



