பொங்கல் பரிசுத் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி!

சற்றுமுன் சென்னை தமிழகம்
IMG 20191129 WA0007 - 2026

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும், அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

பொங்கல் பரிசுத் தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை ஆகியவை தலா ஒரு கிலோவும், கரும்பு 2 அடி, முந்திரி, உலர்திராட்சை, ஏலக்காய் உள்ளிட்ட பொங்கலுக்குத் தேவையான பொருட்களும் வழங்கப்பட உள்ளன. இதற்காக, தமிழக அரசு ரூ.2,363 கோடி 13 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.

edappadi palanisamy 5 - 2026

இந்த திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

இதனைத் தொடர்ந்து, அந்தந்த பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.