உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்றுதான் வழக்கு தொடுத்தோம்: ஸ்டாலின்!

சற்றுமுன் திருச்சி லைஃப் ஸ்டைல்
stalinspeech - 2026

உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்றுதான் வழக்கு தொடுத்தோம்; நிறுத்துவதற்காக அல்ல என்று பேசினார் திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின்!

புதுக்கோட்டையில் பெரியண்ணன் அரசு இல்ல மணவிழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியபோது குறிப்பிட்டவை…

3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல், யார் தடை கேட்பார்கள் என்ற நோக்கிலேயே தமிழக அரசு இருந்தது.

தேர்தலில் இட ஒதுக்கீட்டை முறையாக அறிவித்து தேர்தலை நடத்த வேண்டும் என்றே வழக்கு தொடர்ந்தோம். தேர்தலை நிறுத்த அல்ல!

உள்ளாட்சி தேர்தலில் சரியான நெறிமுறைகளை பின்பற்றக்கோரி இதுவரை 4 முறை மாநில தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தும் எந்த பதிலும் இல்லை.

எடப்பாடி.பழனிசாமியை போல மண்புழுவாக ஊர்ந்து சென்று முதல்வராகும் எண்ணம் எனக்கு இல்லை. சுயமரியாதை என்ற ஒன்று எனக்கு உள்ளது.

உள்ளாட்சி தேர்தலுக்காக ஜனவரியில் தரவேண்டிய பொங்கல் பரிசை இப்பொழுதே வழங்குகின்றனர் ! – என்று பேசினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.