தெலங்காணா முதல்வர் கேசிஆர் பிறந்தநாளுக்கு இலவச ஷேவிங், ஹேர் கட்டிங்…. என்று கலக்கினார் ஒருவர்.
ஃப்ரீ கட்டிங் என்ற பெயரில் ஹைதராபாதில் ஒரு சலூன் கடை நிர்வாகி ஏற்பாடு செய்த போஸ்டர் அனைவரையும் கவர்ந்து வருகிறது. முதலமைச்சரின் பிறந்தநாளுக்காக ஃப்ரீ கட்டிங் அண்ட் சேவிங் செய்வேன் என்று சலுகை அளித்துள்ளார். தன்னுடைய பிரியமான தலைவர் முதல்வர் கேசிஆர் பிறந்தநாள் தொடர்பாக இலவசமாக ஹேர் கட்டிங் சேவிங் செய்கிறேன் என்று ஒரு முடிதிருத்துபவர் அறிவித்துள்ளார்.
கேசிஆர், கேடிஆர் போட்டோக்களோடு ஏற்பாடு செய்திருந்த பேனர் பார்ப்பவர்கள் அனைவரையும் கவர்ந்து வருகிறது. சமூகவலை தளங்களில் வைரலாக சுற்றி வருகிறது. அந்த ஆஃபரை அறிவித்த சலூன் கடை நிர்வாகி ஹைதராபாதில் உள்ள கைரதாபாத் தொகுதியைச் சேர்ந்தவராக தெரிகிறது.
பிப்ரவரி 17 ஆம் தேதி இன்று, கேசிஆர் 66வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். கேசிஆர் பிறந்தநாள் தொடர்பாக மரம் நட வேண்டும் என்று டிஆர்எஸ் கட்சியின் தொண்டர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் முனிசிபல் ,ஐடி துறை மந்திரியும் டிஆர்எஸ் கட்சி ஒர்கிங் ப்ரெசிடெண்ட்டும் முதல்வரின் மகனுமான கேடிஆர் அழைப்பு விடுத்துள்ளார்.
தெலங்காணா மாநிலத்தை பசுமை மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற இலக்கோடு முதலமைச்சர் கேசிஆர் ‘ஹரித ஹாரம்’ நிகழ்ச்சியை பிரஸ்டிஜியஸ் ஆக எடுத்துக் கொண்ட விஷயத்தை கேடிஆர் நினைவுபடுத்தினார். இந்தப் பிறந்தநாளிலும் செடிகளை நட வேண்டும் என்று கட்சித் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் ட்வீட் மூலம் எடுத்துக் கூறியுள்ளார்.
சென்ற வருடம் முதல்வர் கேசிஆர் பிறந்தநாள் அன்று அவருடைய ஆதரவாளர்களும் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக பெரிய கியூவில் நின்றுருந்தார்கள். அதனால் பேகம்பேட், கைரதாபாத், பஞ்சகுட்டா, சோமாஜிகுடா மற்றும் பிற இடங்களில் மிகப்பெருமளவில் டிராபிக் ஜாம் ஏற்பட்டது. இந்த பின்னணியில் கேடிஆர் ட்வீட்டுக்கு முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது.