சென்னை:
ஜெ மறைவுக்கு பின் சீராக சென்று கொண்டிருந்த ஆட்சியை சசிகலாவின் முதல்வர் ஆசை சீர்குலைத்தது. நிர்வாகிகள் பலரும் ஆர்.கே.நகர் சாதகமாக இல்லை என கூறியும் தனது முதல்வர் கனவை நனவாக்க களம் காண முடிவு செய்து கட்சி, சின்னம் இரண்டையும் பலி கொடுத்துவிட்டார் தினகரன். ஆர்.கே.நகரில் தினகரன் போட்டியிட சசிகலாவும் எதிர்த்ததாக சொல்லபடுகிறது.
தினகரன் போட்டி என்பதால் தேர்தல் கமிஷன் முன் எழுப்படும் கேள்விகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் சசிகலாவின் தேர்வு எம்ஜிஆரின் அண்ணன் மகள் அல்லது பகுதி கழக நிர்வாகிகளில் ஒருவர் என்பதாகும்.
1989ல் ஜா, ஜெ என்ற அளவில் இருந்த நிலை மாறி இன்று புதிய பெயரை தேர்வு செய்து மக்களை சந்திக்க வேண்டிய நிலையை உருவாக்கிவிட்டார்களே என எம்ஜிஆர் காலத்து கட்சியினர் கண்ணீர் வடிக்கின்றனர்.
குமுறி நிற்கும் அவர்களின் உள்ளங்களுக்கு மருந்தளிக்க யாரும் இல்லை. விரைவில் இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்பதே அவர்களின் ஆசை.



