வாஞ்சி சிலையின் கீழ் போஸ்டர் ஒட்டும் கிறிஸ்துவ கம்யூனிஸ்ட் கபோதிகள்!

சற்றுமுன் நெல்லை புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
vanchinathan statue - 2026

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உள்ளது புகழ் பெற்ற வாஞ்சிநாதன் சிலை. செங்கோட்டை பேருந்து நிலையத்துக்கு அருகில், கேரளம் செல்லும் சாலைப் பிரிவு மத்தியில் உள்ள வாஞ்சிநாதன் சிலை, ஊருக்குப் பெயர் சேர்த்த சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் நினைவாக அமைக்கப் பட்டுள்ளது.

இந்த வாஞ்சி நாதன் சிலையின் கீழ் சிலை குறித்த கல்வெட்டும் தகவலும் உள்ளது. ஆனால், சில அமைப்புகள் வாஞ்சி சிலையின் கீழுள்ள பீடத்தில் போஸ்டர் ஒட்டுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன.

மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளித்தும் இந்த அவலம் தொடர்வதாக பொருமுகின்றனர் பொதுமக்கள்.

குறிப்பாக, கிறிஸ்துவ மத மயமாக்கலை திணித்த ஆங்கிலேயருக்கு எதிராகவும், அவர்களின் ஆளுகை அராஜகங்களுக்கு எதிராகவும் பாரதமாதா சங்கம் அமைத்து போராட்டங்களை நடத்தியவர்களில் முக்கியமானவர் வாஞ்சிநாதன் எனும் இளைஞர்.

vanchi 4 - 2026

மேலும் ஆயுதப் புரட்சி மூலம் ஆங்கிலேயரை விரட்டி விடலாம் என்ற கொள்கையுடன் தீவிரப் போக்கை கைக்கொண்டனர் இந்த சங்கத்தினர். சனாதன மதம் ஆங்கிலேயர்களால் சீரழிகிறது என்ற கொள்கையுடன் தீவிரமாக எதிர்த்து நின்ற வாஞ்சியின் சிலையின் கீழ், கிறிஸ்துவ மத போதனை, மதமாற்ற பிரசாரங்கள் குறித்த சுவரொட்டிகள் ஒட்டப் படுவதும், கம்யூனிஸ்ட் இயக்கங்களின் பிரசார சுவரொட்டிகள் ஒட்டப் படுவதும், பொதுமக்களுக்கு பெரும் வேதனையை அளித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த அப்பகுதியினர்,
மாவட்ட நிர்வாகமே நடவடிக்கை எடு.
இல்லை அண்ணா, பெரியார் சிலைகள் மீது ஒட்டினால் தான் நடவடிக்கை எடுக்கப்படுமோ? என்று கேள்வி எழுப்புகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.