பக்கிங்காம், கூவத் தை பழைய நிலைக்கு கொண்டுவர நீதிமன்றம் கருத்து

Published:

கடல் காற்று மட்டும் இல்லையென்றால் சென்னை நரகம் ஆகிவிடும். சென்னையின் பழைய அழகை மீட்டெடுக்க வேண்டும். 
மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப சென்னை நகரின் கட்டமைப்பை மாற்றி அமைக்க வேண்டும். 
அடையாறு, பங்கிங்கம், கூவம் கால்வாய்களை சுத்தப்படுத்தி பழைய நிலைக்கு கொண்டு வரவேண்டும்.  அந்த இடத்தில்  பொழுது போக்கு வசதி, பூங்கா வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.  
கழிவு நீர் கடலில் கலப்பதை தடுக்க வேண்டும்.    கழிவு நீரை குழாய் மூலமாக கொண்டு சென்று தனியாக ஒரு இடத்தில  சேகரித்து  அதை விவசாயத்துக்கு பயன்படுத்தும் வகையில்  மறு சுழற்சி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தொடர்பாக தமிழக அரசு தனி துறை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று கருத்து கூறியது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img