சென்னை:
விளம்பர நிறுவனத்திடம் 1 கோடியே 69 லட்ச ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவரை மத்திய குற்றப் பிரிவு போலிசார் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரித்தனர்.
அடையாரில் விளம்பர நிறுவனம் வைத்திருப்பவர் ஆதித்யா. இவரிடம் ஆன்லைன் மூலம் இந்திய முழுவதும் தங்கும் விடுதி ஏற்பாடு செய்யும் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி யோகேந்திர வசுபால் என்பவர் தனது நிறுவனத்தின் விளம்பரங்களை கொடுத்துள்ளார். விளம்பரம் வெளியிட்ட பிறகு அதற்கான தொகை 1 கோடியே 69 லட்ச ரூபாயை விளம்பர நிறுவனத்திற்கு கொடுக்காமல் யோகேந்திர வாஸ்பால் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து விளம்பர நிறுவனம் நடத்தி வரும் ஆதித்யா மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் தெரிவித்தார். புகாரை விசாரித்த மத்திய குற்றப்பரிவு போலிசார் யோகேந்திர வசுபால் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் யோகேந்திர வாசுபாலை ஒரு நாள் காவலில் எடுத்து மத்திய குற்றப்பிரிவு போலிசார் விசாரணை செய்தனர். இதனையடுத்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட யோகேந்திர வசுபாலின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், அவர் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இது பொருளாதாரக் குற்றம், சிவில் கேஸ் அடிப்படையில் வரும் என்றும் கிரிமினல் பிரிவில் வராது என்றும், அவர் மீண்டும் புழல் சிறையில் செய்யப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஊடகங்களில் கருத்துகள் அதிகம் பரவின.



