இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுத்ததாக தினகரன் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இதுகுறித்து டி.டி.வி தினகரனுக்கு டெல்லி குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.மேலும், டி.டி.வி தினகரன் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினகரன் மீது கிரிமினல் நடவடிக்கை: அரசியல் கட்சிகள் ஆவேசம்
இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுத்ததாக தினகரன் மீது டெல்லி போலீசார் வழக்குப் பதிவு. அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் ராமகிருஷ்ணன் வலியுறுத்தல். தினகரனுக்கு மேலும் பல கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.



