தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் தர முயற்சி மேற்கொண்டதாகப் பதியப்பட்ட வழக்கில், டி.டி.வி தினகரன் முதல் குற்றவாளி என்று சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் ஜாமீனில் வெளிவரமுடியாத லஞ்ச ஊழல் தடுப்பு சட்டம் IPC Sec 170 and 120(b). Sec 8 of Prevention of Corruption Act. பிரிவுகளின் கீழ் T.T.V தினகரன் மீது வழக்கு பதிவு செய்தது தில்லி போலீஸ்.
முன்னதாக அதிமுக துணைப்பொதுச் செயலாளர் டி. டி.வி. தினகரன் மீது டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்துதது. இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி தினகரனுக்கு டெல்லி போலீஸ் சம்மன் அனுப்பியது .
இரட்டை இலை சின்னத்தைப் பெற சுபாஷ் சந்திரா என்ற இடைத்தரகருக்கு ரூ.1.30 கோடி லஞ்சம் முன்பணமாகக் கொடுத்ததாக புகார் எழுந்துள்ளதை அடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



