பிள்ளை குட்டி பெத்துக்கிட்டு கட்டிகலாமா..! குழந்தை முன்பு திருமணம் புரிந்த காதலர்!

Published:

kokila - 2026

திண்டிவனம் அருகே தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவி கோகிலா. இவர் அதே பகுதியில் வசித்து வரும் பரமசிவன் என்பவரை காதலித்தார்.

இந்நிலையில் இருவரும் எல்லை மீறி பழகியுள்ளனர். கோகிலா கர்ப்பமானார் இதை இருவருமே எதிர்பார்க்கவில்லை. வீட்டில் சொல்லவும் முடியவில்லை. ஆனாலும் வயிற்றை மறைத்து கொண்டு காலேஜ்-க்கு சென்று வந்தார்.

மாதம் வளர தொடங்கியதும், வயிறும் வளர்ந்தது. அதற்கு மேல் மூடி மறைக்க முடியவில்லை. பிரசவ வலி வந்து கதறினார் கோகிலா. இதை பார்த்து பதறிய பெற்றோர், உறவினர்கள் அவரை உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு கோகிலாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதன்பிறகுதான் அந்த பெண்ணிடம் நடந்தது குறித்து பெற்றோர் விசாரித்தனர். பரமசிவன்தான் எல்லாத்துக்கும் காரணம் என தெரியவந்ததும் கொதித்து போயினர். கல்யாணம் ஆகாமலேயே தன் மகள் குழந்தைக்கு தாயானதை நினைத்து கதறினர். காவல்நிலையத்தில் பரமசிவன் மேல் புகாரும் தந்தனர்.

இது சம்பந்தமாக காவல்துறையினரும் பரமசிவனை விசாரித்தனர். அப்போது கோகிலாவை கல்யாணம் செய்து கொள்ள பரமசிவன் பரிபூரண சம்மதம் தெறிவித்தார். பின்னர் பெற்றோர்கள் உறவினர்கள் முன்னிலையில் மட்டுமல்ல. பிறந்த குழந்தையின் முன்னிலையிலும் இருவருக்கும் திருமணம் நடந்தது. குழந்தை பெற்ற பிறகு நடந்த இந்த திருமணம் திண்டிவனம் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

Related articles

Recent articles

spot_img