என் மகளின் திருமணத்திற்கு வாருங்கள்… பிரதம மந்திரிக்கு அழைப்பு விடுத்த ரிக்ஷாக்காரர். மோடி என்ன சொன்னார் தெரியுமா?
அவர் ஒரு சாதாரண ரிக்ஷாக்காரர். தினமும் ரிக்ஷா சைக்கிள் மிதித்தால்தான் வயிறு நிறையும். தன் வாழ்நாள் முழுவதும் ரிக்ஷா மிதித்து வந்த பணத்தில் சிறிது சேமித்து தன் மகளுக்கு திருமணம் செய்கிறார். இந்த திருமணத்திற்கு தன் உறவினர்களோடு நண்பர்களையும் திருமணத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்தார். அவ்வாறு அழைப்பு அனுப்பியவர்களுள் ஒரு விவிஐபி கூட உள்ளார் . அந்த விவிஐபி யார்? அவர் ரிக்ஷாகாரரின் மகளின் திருமணத்திற்கு வந்தாரா?
உத்தரப் பிரதேசத்தில் ரிக்சாக்காரர் ஒருவர் தன் மகளுக்கு திருமணம் செய்கிறார். அவர் உறவினர் நண்பர்களோடு கூட அழைப்பு அனுப்பியவர்களுள் இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடி கூட உள்ளார். ஆமாம் இது உண்மை.
டூம்ரி கிராமத்தைச் சேர்ந்த மங்கள் கெவாத் பிரதமர் நரேந்திர மோடியை தன் மகள் திருமணத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார். தன் மகளின் திருமணத்திற்கு வந்து ஆசீர்வதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அந்தத் திருமணப் பத்திரிக்கையை தில்லியிலுள்ள பிரதமரின் அலுவலகத்திற்கு அனுப்பினார். பிப்ரவரி 12ஆம் தேதி தன் மகளின் விவாகம் நடக்கப் போகிறது என்று கூறினார் . இந்த விஷயம் தாமதமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சில நண்பர்கள் பிரதமர் மோடியை அழைக்கும்படி கூறியதால் தன்னுடைய ஆசைப்படியும் பிரதமரின் காரியாலயத்திற்கு திருமண பத்திரிக்கையை அனுப்பினார். ஒன்று தில்லி அலுவலகத்துக்கும் மற்றொன்று பிரதமர் தொகுதியான வாராணசி அலுவலகத்துக்கும் அனுப்பியதாகக் கூறினார்.
திருமண அழைப்பிதழைப் பார்த்த பிரதமர் மோடி ரிக்சாக்காரருக்கும் அவருடைய மகளுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து கடிதம் எழுதினார். குடும்பத்திற்கும் அவருடைய மகளுக்கும் தன் ஆசிகளை தெரிவித்து பிரதமர் மோடி கடிதம் எழுதினார் . இந்தக் கடிதம் சரியாக பிப்ரவரி 12 ஆம் தேதி திருமண நாளன்றே வந்து சேர்ந்தது. கடிதத்தைப் பார்த்து ஆனந்தத்தில் குதித்தார் கெவாத்.
பிரதமர் மோடியிடம் இருந்து கடிதம் வரும் என்று தான் எப்போதும் எதிர்பார்க்க வில்லை என்றும் ஒரேயடியாக கடிதத்தைப் பார்த்ததும் தன் குடும்பத்தினர் மிகவும் ஆனந்தத்தில் திளைத்தோம் என்றும் கூறினார்.
பிரதமர் மோடியிடமிருந்து வந்த கடிதத்தை தன் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் காண்பித்தார். இந்தக் கடிதத்தை வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பாக வைத்துக் கொள்வேன் என்றார். அதோடு கெவாத் கங்கா மாதாவின் தீவிர பக்தர். ரிக்சா ஓட்டி அதன் மூலம் வரும் ஊதியத்தில் சிறு பகுதியை கங்கா மாதாவுக்கு பூஜை செய்வதற்கு செலவழிப்பார்.
ஸ்வச் பாரத் – தூய்மை இந்தியா திட்டத்தில் கூட மிகவும் ஆக்டிவாக பங்குபெற்றார் கெவாத். பிஜேபி அங்கத்தினராக பிரதமர் மோடி மூலம் பதிவு செய்துகொண்டார் மங்கள் கெவாத்.