தனது காதலியிடம் தனது காதலை கூற முடிவு செய்த டெனிஸ் காதலர் தினமான கடந்த வெள்ளிக்கிழமை அலெஸ்சாண்டிரியாவை தான் பணிபுரியும் ராணுவ வளாகத்திற்கு அழைத்துள்ளார்.
இதையடுத்து ராணுவ தளத்திற்கு வந்த தனது காதலியின் கண்களை மூடிய காதலன் ராணுவ தளத்தின் மையப்பகுதிக்கு அழைத்து சென்றான். அங்கு டெனிஸ் சக வீரர்களின் உதவியுடன் மொத்தம் 16 ராணுவ டேங்கர்களை இதய வடிவில் நிறுத்தி வைத்திருந்தார்.
அப்போது கண்ணை திறந்த காதலி அலெஸ்சாண்டிரியா ராணுவ டேங்கர்கள் இதய வடிவில் சுற்றி நிற்பதையும், காதலன் டெனிஸ் கையில் பூங்கொத்துடன் தன்னை லவ் ப்ரபோஸ் செய்ததையும் கண்டு இன்ப அதிர்ச்சியடைந்தார். என்னை காதலிக்கிறாயா? என கேட்ட டெனிசின் கேள்விக்கு இன்ப அதிர்ச்சியில் இருந்த உடனடியாக ஆம் என கூறி காதலுக்கு சம்மதம் தெரிவித்தார்