திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி நடத்திய மோட்டார் ஆய்வாளர்கள் தேர்வு முறைகேட்டில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, வீரபாண்டி ஆறுமுகம், அந்தியூர் செல்வராஜூக்கு தொடர்பு உள்ளது. இவர்கள் சிறைக்கு போகும் நேரம் வரும். 2006-2011 வரையிலான டிஎன்பிஎஸ்சி முறைகேடு குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார்.
சிங்காரவேலர் 161ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள அவரது உருவச் சிலையின் கீழ் அலங்கரிக்கப்பட்ட படத்துக்கு தமிழக அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜு, பாண்டியராஜன், சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், 2006-2011ஆம் ஆண்டுகாலத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் முறைகேடு நடந்திருப்பதாகவும், இதில் கே.என்.நேரு, அந்தியூர் செல்வராஜ், மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்துக்கு தொடர்ப் இருப்பதாகவும், அவர்களின் பரிந்துரைக் கடிதங்கள் முறைகேடு தொர்பான சோதனையின் போது அப்போதைய டிஎன்பிஎஸ்சி தலைவர் செல்லமுத்து வீட்டில் சிக்கியிருப்பதாகவும் கூறினார்.
தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்து கூறிய அவர், இதை மத்தியில் ஆட்சியிலிருந்தபோது காங்கிரஸ், திமுக ஆகியவையே கொண்டு வந்தன, அது தற்போது நடைமுறைக்கு வருகிறது என்றார்.
தேசிய மக்கள்தொகை பதிவேடு விவகாரத்தில், தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றார் ஜெயக்குமார்
ஊடக நிறுவனங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் குறித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதியின் அவதூறுக் கருத்து திமுகவின் பண்பைக் காட்டுவதாக விமர்சித்தார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்.