
மாசிமகத்தை ஒட்டி, தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள தர்மசம்வர்த்தினி அம்பாள் சமேத குலசேகர நாத சுவாமி திருக்கோயிலில் முருகப் பெருமான் வீதியுலா நடைபெற்றது.
மாசி மகத் திருவிழாவில், சுவாமி சுப்பிரமணியர் வெள்ளி மயில் மீது திருவீதி உலா வந்தார். இதன் தொடக்கமாக காலை பத்து மணிக்கு பால் குடம் எடுக்கப்பட்டு கோவிலுக்கு வந்து முருகப் பெருமானுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அபிஷேகத்தை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது மாலை 6 மணிக்கு சிறப்பு தீபாரதனையும் அதனை தொடர்ந்து இரவு 8 மணிக்கு சுப்பிரமணியர் வெள்ளி மயில் மீது திருவீதி உலாவும் வந்து பக்தர்களுக்கு காட்சி அருளினார்.

செங்கோட்டை வியாபாரிகள் சங்கம், நகர இந்து முன்னணி சார்பில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சியிலும் பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமியின் அருளை பெற்றனர்.



