குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அரசு உதவி பெறும் தொண்டு நிறுவனமான RED CROSS செஞ்சிலுவை சங்கம் (நெல்லை) தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
செஞ்சிலுவை சங்கம் அரசு உதவி பெறும் தொண்டு நிறுவனமாகும். மாவட்ட ஆட்சி தலைவரே ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இதன் கௌரவ தலைவர் ஆவார். நெல்லை மாவட்ட செஞ்சிலுவை சங்கம் பெயருக்கு ஏற்றார் போல கிறித்தவர்கள் ஆதிக்கத்திலும் கட்டுப்பாட்டிலுமே கடந்த பல வருடங்களாக இருந்து வருகிறது
டாக்டர் சார்லஸ் , லிட்டில்பிளவர் பள்ளி தாளாளர் மரியசூசை , பாதிரியார் அந்தோணி குரூஸ், ஸ்டெல்லா ராய் போன்றவர்களே நெல்லை செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் ஆவர். இவர்களுடன் ஜமால் முகம்மது ஈஸா, நயினா முகம்மது ஆகியோரும் நிர்வாகிகள் என அந்த கடிதத்திலேயே குறிப்பிடப்படுகிறது
இவர்கள் அனைவரும் சேர்ந்து மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்! அதோடு நில்லாமல் போராட்டகாரர்களுக்கு குடிநீர் மற்றும் மருத்துவ உதவி செய்ய போவதாகவும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்!
அரசுஉதவி பெறும் தொண்டு நிறுவனம் அதுவும் மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்ட அமைப்பு அரசின் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி பத்திரிக்கை நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளது மிகுந்த அதிர்ச்சியளித்துள்ளது
நெல்லை மாவட்ட ஆட்சியர் திருமதி ஷில்பா கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக மக்கள் பேசி வரும் நிலையில்,
ராதாபுரம் தாலுகா சிதம்பராபுரம் கிராம பஞ்சாயத்தில் சுமார் 250 இந்து ஓட்டுகளை 5 கிலோமீட்டர் தொலைவிலுள்ள வேறொரு பஞ்சாயத்திற்கு இணைத்து சிதம்பராபுரம் (இதை யாக்கோபுரமாக மாற்ற கிறிஸ்தவர்கள் பிரச்சனை செய்து வழக்கு தீர்ப்பு போராட்டம் என ஊர் ரெண்டுபட்டு நிற்பது குறிப்பிடதக்கது) பஞ்சாயத்து கிறிஸ்தவ ஓட்டு மெஜாரட்டி ஆகியுள்ளது என மக்கள் புகார் அளித்துள்ள நிலையில்
நெல்லை கருப்பந்துறையில் காங்கிரஸ் பிரமுகரும் CSI சர்ச் நிர்வாகியுமான தர்மராஜ் என்பவர் ஆற்று புறம்போக்கு மற்றும் நெடுஞ்சாலை இடத்தை ஆக்கிரமித்துள்ள நிலையில் கலெக்டரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படும் நிலையில்
மானூர் அடைக்கலப்பட்டிணத்தில் சிறுபாண்மையான இந்துக்கள் தங்கள் சொந்த நிலத்தில் கோவில் கட்ட கிறிஸ்தவர்கள் நிர்பந்தத்தில் மாவட்ட நிர்வாகம் தடுத்து வருவதாக கூறப்படும் நிலையில்
இதுபோல் பல பிரச்சனைகளுக்கு நடுவில்
மாவட்ட ஆட்சியர் தலைமை வகிக்கும் செஞ்சிலுவை சங்கம் தீர்மானம் இயற்றியுள்ளது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என கூறப்படுகிறது!
அரசின் தலைமைக்கும் இந்த செய்தி சென்றடைந்ததாக கூறப்படுகிறது!
தற்போது செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் இந்த கடிதத்தை தாங்கள் அனுப்பவில்லை என்றும் அவர்கள் பதவிக்காலம் முடிந்ததாகவும் மறுத்துள்ளனர் என கூறப்படுகிறது! நெல்லை மாவட்ட செஞ்சிலுவை சங்கத்தில் என்ன நடக்கிறது என்பது புரியாத புதிராக உள்ளது!
மாவட்ட ஆட்சியர் இது குறித்த உண்மை நிலையை விளக்குவாரா என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்!
- கா.குற்றாலநாதன்