கேரளத்தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் முரளிதரனுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
மார்ச் 14ஆம் தேதி திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடந்த கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் வி.முரளிதரன் பங்கேற்றார். அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இந்நிலையில், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதாகக் குறிப்பிட்டு, தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாக அறிவித்திருந்தார் முரளிதரன். இந்நிலையில், வி.முரளிதரனுக்கு நடந்த பரிசோதனையில், கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது.