நல்லகண்ணுவின் நடத்தை குறித்து இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில்…
சாணக்கியா விருதை முதலில் பெற்றுக் கொள்ள நிகழ்ச்சிக்கு வருவதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு பின்னர் விருதைப் புறக்கணிப்பதாக அறிவித்து தியாகி வேசம் போடும் நல்லகண்ணு விற்கு இந்து மக்கள் கட்சி சார்பில் கண்டனம் தெரிவிக்கிறேன். நல்லகண்ணு எனும் போலியும், பல்லிளிக்கும் கம்யூனிஸ பிம்ப கட்டுமானமும் நாற்றம் எடுக்கிறது.
தமிழகத்தில் இருக்கும் ஒரே நேர்மையாளர் நல்லகண்ணு என்று ஒரு போலி பிம்பத்தை தங்களின் அர்பன் நக்ஸல் நெட்வொர்க்கை கொண்டும், இடதுசாரி ஊடகங்களில் பாரசைட்டாக ஒட்டிக்கொண்டிருக்கும் கம்யூனிஸ, மாவோயிஸ கைக்கூலிகள் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக மெல்லக் கொல்லும் விஷம் போல ஒரு பிம்பத்தை கட்டமைத்து விட்டார்கள்.
போலி விக்கிபீடியா குறிப்புகள், போலி பேட்டிகள் மூலம் அறிவு ஜீவி என்றும் நேர்மையாளர் என்றும் காந்தியவாதி என்பது போன்ற பிம்பத்தை பொது புத்தியில் ஊன்றி விட்டார்கள். நல்லகண்ணு என்ன வகையில் நல்லவர்ன்னு கேட்டா யாருக்கும் தெரியவில்லை. அதோடு அவர் எப்படிப்பா நேர்மையாளர்ன்னா, ஜெயலலிதா உயிரோடு இருக்கையில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து லோக்சபா, ராஜயசபா சீட்டுக்காக கெஞ்சியவர். ஜெயலலிதாவின் எந்த ஊழலையும், கண்டும் காணாமலும் இருந்தவர். மணற் கொள்ளைக்கு எதிராக பல நிஜ இயற்கை ஆர்வலர்கள் போராடிய பிறகு தங்களின் மாவோயிஸ நீதிபதிகள் லாபி மூலம் ஒரு விளம்பர வழக்கை தாக்கல் செய்து அதன் மூலம் புகழ் வெளிச்சத்தில் நனைந்து கொண்டார்.
தமிழகத்தை சசிகலா எனும் ஜனநாயக காவலர் தான் ஆள வேண்டும் என்று சசிகலாவின் பாதங்களில் பணிந்து வேண்டிக்கொண்ட உத்தமர். 25 கோடிக்கு திமுகவிடம் அடகு போனது பற்றி ஒரு கண்டனம் கூட தெரிவிக்காத உத்தமர் இவர். 15 கோடி ரூபாய்க்கு உண்டியல் குலுக்கும் இயக்கத்திற்கு ஏன் கார்ப்பரேட் கட்சி ஆபீஸ் என்று இது வரை கேட்காத உத்தமோத்தமர். அதன் கட்டுமானத்திற்காக வி வி மினரல் வைகுண்டராஜன் அண்ண்னாச்சியிடம் கையூட்டு பெற்றவர்.
இப்போது கூட அதிமுக அரசிடம் கையேந்தி வீடு வாங்கிக்கொண்டு ஜம்பமாக பிச்சைக்காசு ஒரு லட்சத்தை மறுப்பவர். அப்புறம் காந்தியவாதி என்ற பொய், நல்லகண்ணு ஒரு குற்றம் நிருபிக்கப்பட்ட ஆயுள் தண்டணை கைதி. ரயில்வே பாலங்களையும், பேருந்துகள், இருப்பு பாதைகளை வெடிகுண்டு வீசித்தகர்த்து விட்டு கோழை போல தலித் குழந்தைகளையும் , பெண்களையும் கேடயமாக்கி கொண்டு 22 மாத காலம் அஞ்சி நடுங்கி தலை மறைவு வாழ்க்கை வாழ்ந்தவர்.
நெல்லை சதி வழக்கின் முதன்மை குற்றவாளிகளில் ஒருவரான வெடிகுண்டுடன் கைது செய்யப்பட்ட தண்டணை கைதி நல்ல கண்ணு. தாமிரபரணியில் புஷ்கரம் நடத்தக்கூடாது என்று மாற்று மதத்தவர்களின் தூண்டுதலின் பேரில் விஷம் பரப்பியவர் இவர்.
பொலிட் பீரோ என்ற கும்பலில் இது வரை ஒரு பட்டியல் சமூகத்தவரையோ, பழங்குடியினரையோ ஏன் அனுமதிக்க வில்லையென்று கூட கேட்காதவர். வரதராஜனுக்கு நிகழ்ந்த அநீதிக்கு குரல் கொடுக்காதவர். திமுக, அதிமுகவுடன் மாறி மாறி கூட்டணியில் இருந்து கொண்டு எல்லாவித சுகங்களையும் அனுபவித்துக்கொண்டே , அரசின் இலவச வீடு வரையில் ஓசியில் வாங்கிக்கொண்டு தான் பெரிய நேர்மையாளர் போன்ற போலி பிம்பத்துடன் உலவும் சாதாரணர் தான் நல்ல கண்ணு. ஒரே கட்சியில் இருந்து கொண்டு அவர்கள் சுமத்தும் இழிவுகளை எல்லாம் தாங்கிக்கொண்டு பிழைத்து கிடந்தது இவரின் பிழைப்பு வாத தெளிவிற்கு நல்ல உதாரணம்…. – என்று குறிப்பிட்டுள்ளார் அர்ஜுன் சம்பத்.