மார்ச் 30-ம் தேதிக்குள் எல்லாம் சரியாகிவிடும் என அரசு எதிர்பார்க்கிறது என்று தமிழக நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் அனைத்தும் மார்ச் 31ம் தேதிக்குள் சரியாகிவிடும் என்று அரசு எதிர்பார்க்கிறது.
தில்லியில் இருந்து ரயில் மூலம் சென்னை வந்த வட மாநில இளைஞருக்கு கரோனா இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கரோனா பாதித்த வடமாநில இளைஞருடன் தொடர்பில் இருந்த 10 பேரையும் தனிமைப்படுத்தியுள்ளோம்.
சோப்புப் போட்டு கைகளை கழுவினாலே போதும். வேறு எதுவும் தேவையில்லை.
ஏற்கனவே தமிழகத்தில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 48 வயது பொறியாளர் பூரண குணம் அடைந்து, அவருக்கு கரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகும், ஒரு குறிப்பிட்ட காலம் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு, பிறகு அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ச் செய்யப்பட்டு, அவருக்கு தெரிந்த ஒரு இடத்தில் அவர் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவரைப் பற்றி வேறு எந்தக் கேள்விகளும் கேட்க வேண்டாம், அவர் இன்னும் 15 நாட்களில் உங்களைச் சந்திப்பார் என்று தெளிவுபடுத்தினார்.
#Coronaupdate: the first #Covid19 positive patient has been discharged from #RGGH,Chennai. He has completely recovered from the illness & back home.He will be home quarantined for 2 weeks. @MoHFW_INDIA #TNHealth #Vijayabaskar #TN_Together_AgainstCorona
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 18, 2020