
சென்னை:
நடிகர் ரஜினிகாந்த் தான் அறிவித்த போரினைத் தொடங்கும் முன்பே, அரசியல்வாதிகள் மத்தியில் போர் தொடங்கிவிட்டது. போர் வரும்போது பார்க்கலாம் என்று ரஜினி அறிவித்தாலும் அறிவித்தார்… அதற்குள் மற்றவர்கள் அவரை வைத்து போரை நடத்தி வருகின்றனர்.
ரஜினிகாந்த்தை பாஜக.,வில் இணைய அழைப்பு விடுப்பது, கெஞ்சுவது போல் உள்ளது என நடிகையும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு டுவிட்டரில் கருத்து பதிவிட்டார்.
இதனால் ஆவேசமடைந்த தமிழிசை, நல்லவர்களை வரவேற்பது கெஞ்சுவது போன்றதல்ல. திமுகவில் இருந்து விரட்டப்பட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தீர்கள். கட்சி விட்டு கட்சி தாவுவது குஷ்புக்கு வாடிக்கை என்றார் டுவிட்டரில்!
அதற்கு ரீடுவிட்டிய குஷ்பு, திமுகவில் இருந்து வெளியேறியதற்கான காரணம் தனக்கு மட்டுமே தெரியும். திமுகவில் இருந்து தான் வெளியேறி 6 மாதங்களுக்கு பிறகே காங்கிரஸில் இணைந்தேன். ஆனால் காங்கிரஸில் இருந்து வெளியேறுவோரை அன்றைய தினமே பாஜக தங்கள் கட்சியில் இணைத்துக் கொள்கிறது என்று குஷ்பு பதிலடி கொடுத்தார்.
இப்படியாக டுவிட்டர் யுத்த களத்தில் வார்த்தைப் போரை நடத்தி வருகிறார்கள் தமிழிசையும் குஷ்புவும்! இரண்டு தேசிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இப்படி பேசிய கட்சிகளாக வார்த்தைப் போரை டுவிட்டரில் நிகழ்த்தி வருவதைக் கண்டு பலரும் ஆச்சரியப்பட்டனர். இந்நிலையில்,
@khushsundar Trying and bringing good people to party is not begging.Words reveals thoughts.
— Tamilisai Soundrajan (@drtamilisaibjp) May 24, 2017
@khushsundar thank u I am good in reading others brains as a doctor my speciality is scanning others brain
.
— Tamilisai Soundrajan (@drtamilisaibjp) May 24, 2017
@khushsundar தங்களைசேர்க்ககாங்கிரசிலிருந்து தூதர்கள் வரவில்லைஆனால் தங்களைதிமுகவிலிருந்து துரத்துபவர்கள் இருந்தார்களே https://t.co/oxjkmnNfg5
— Tamilisai Soundrajan (@drtamilisaibjp) May 24, 2017
@khushsundar joining?jumping parties?Great ideology U joined DMK u left to joinCong?onwhat ideology? Everyone knows https://t.co/p6z5DyR6oS
— Tamilisai Soundrajan (@drtamilisaibjp) May 24, 2017
Never denied that..I respect her as a woman n a senior person..n my views r from the other side of the fence..no personal hard feelings..?? https://t.co/E6D4JFPGtt
— khushbusundar (@khushsundar) May 25, 2017
It was a reply 2 ur own words Mam..recollect what u said..n let me remind u once again hw u started it all..actions reveals thoughts indeed? https://t.co/050YUK4DXv
— khushbusundar (@khushsundar) May 24, 2017



