தென்காசியை அடுத்த திப்பணம்பட்டியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி
தொடர்ந்து 7வது நாளாக போராட்டமும், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மதுபான
கடைக்கு பூட்டு போட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
கடந்த 1ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற பொதுமக்கள்
மதுக்கடைக்கு
அருகில் பந்தல் அமைத்து, சமையல் செய்து சாப்பிட்டு வருகின்றனர்; தினந்தோறும்
நூதன போராட்டம் நடத்தி தங்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.
போராட்டத்தின் 7வது நாளாக நேற்று மதுவால் குடும்பம் சீரழிவதை சித்தரிக்கும்
வகையில் வில்லிசை நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து டாஸ்மாக் கடைக்கு பெண்கள்
பூட்டு போடும் போராட்டம் நடத்தினர். பல்வகையான போராட்டம் நடத்தியும் நேற்று
அரசு அதிகாரிகள் யாரும் வரவில்லை.
ஆனாலும் மதுக்கடையை நிரந்தரமாக அகற்றும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்தபோவதாக
போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.
மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தில் வில்லிசை நிகழ்ச்சி
Popular Categories




