
- தலைமைச் செயலகம் முதல் மாவட்ட அரசு அலுவலகம் வரை அனைத்து பணியாளர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும்.
- தேவையான போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தரப்படும் – தமிழக அரசு.
- அனைத்து அலுவலர்களும் பணிக்கு வர தயாராக இருக்க வேண்டும்.
- அரசு ஊழியர்களுக்கு சனிக்கிழமையும் வேலை நாளாக அறிவித்தது தமிழக அரசு
வரும் திங்கள் முதல் அரசு அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன் இயங்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஊழியர்கள் 3 குழுக்களாக பிரித்து வாரத்தில் 6 நாட்கள் பணியாற்ற உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஊழியர்கள் வாரத்தில் 6 நாட்கள் பணியாற்ற உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது! 18 ஆம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத ஊழியர்களுடன் பணியாற்ற உத்தரவிடப் பட்டிருக்கிறது.
அரசு அலுவலகங்களில் ஊழியர்களை 3 குழுக்களாக பிரித்து வாரத்தில் தலா 2 நாட்கள் வீதம் பணியாற்ற வேண்டும் என்றும், குரூப் ஏ பணியாளர்கள் வாரத்தின் 6 நாட்களிலும் பணியாற்ற வேண்டும் என்றும், அரசு அலுவலகங்களின் தலைமை பொறுப்பில் இருப்பவர்களும் வாரத்தின் 6 நாட்களும் பணியாற்ற வேண்டும் என்றும் தலைமைச் செயலர் உத்தரவில் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.
சுழற்சி முறையிலான பணியின் போது வீட்டில் இருக்கும் ஊழியர்கள் எலக்ட்ரானிக் முறையில் அலுவலகத்தில் தொடர்பில் இருக்க வேண்டும் என்றும், காவல்துறை, சுகாதாரத்துறை, கருவூலத்துறை, மாவட்ட நிர்வாக அலுவலகங்கள் ஏற்கனவே செயல்படும் முறையிலேயே தொடரும் என்றும் உத்தரவில் தெளிவாக்கப் பட்டுள்ளது.

